கதையாசிரியர் தொகுப்பு: வா.மு.கோமு

14 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தி வீட்டு தேநீர்!

 

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன். எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், ‘பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல,


சூரம்பட்டியில் ஓர் இரவு

 

  பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் நான் வண்டியைக் கிளப்பினேன். சூரம்பட்டி நான்கு வழிப் பாதையில் வடக்கு நோக்கிச் செலுத்தினேன். ஈரோடு அக்ரஹாரம் வரை கல்லூரிப் பெண் ஒருத்தியை என் பஜாஜ் டிஸ்கவரில் சூரம்பட்டியில் இருந்து இரவு இரண்டு மணிக்கு பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு, காலியான சாலையில் பயணிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.


ஒரு முறை தான் பூக்கும்

 

  பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை. வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட


பஞ்சும் நெருப்பும்!

 

  திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷûம்தான். அட, அப்படியானால் அவர்கள் இளம் ஜோடிப் புறாக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நொடியில் யூகித்திருப்பீர்கள். பின்னே இந்தக் காலத்தில் எங்கே அண்ணனும் தங்கையும் இணைந்து வந்து படம் பார்க்கிறார்கள்? தனுஷை போடா போடா என்று வீட்டுக்குத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள் காதலி! ஒரு நிமிஷம் என்று தனுஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நின்றான். எங்கே அந்தப் பெண்ணின்


சாதிகள் இல்லையடி பாப்பா

 

  நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா. “”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி. இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள். ரமேஷ் சுள்ளியம்புத்தூரில்