கதையாசிரியர் தொகுப்பு: வாஸந்தி

18 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல் தரும் தருவே…

 

 அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. சேஷப்பா ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப் பார்த்தான். கோத்துக் கோத்து சங்கிலியாய்ப் படர்ந்த எழுத்துக்களில் எல்லா சமாசாரமும் இருந்தது, அத்தைப் பெண்ணின் வரப்போகும் சீமந்தத்திலிருந்து மாடு கன்று போட்டது வரை. அவன் கேட்டிருந்த பணத்தைப் பற்றித்தான் பேச்சையே காணோம். சேஷப்பா குழப்பத்துடன் கடிதத்தை அர்த்த மில்லாமல் கைகளில் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பரீட்சைக்குக் கட்ட பணம் அனுப்பச் சொல்லி எழுதின கடிதம் போய்ச் சேர்ந்து தானே இந்தக் கடிதம் எழுதியிருக்கிறார்! பின்


சிறகுகள்

 

 தமயந்தி அண்ணாந்து பார்த்தாள். பயங்கர அவசரத்துடன் கூட்டம் கூட்டமாய் ஆகாயத்தில் பச்சையும் வெள்ளையுமாய் கறுப்பும் சாம்பலுமாய் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கரிய மேகக்கூட்டங்கள் உருண்டு திரண்டு நகரும் லாவகத்தைச் சற்று நேரம் பார்த்தபடி அவள் நின்றபோது பெரிய பெரிய பொட்டாக நீர்த்திவலைகள் மேலே விழுந்தன. சில்லென்று அடித்த காற்றில் உடம்பு சிலிர்த்தது. “பெரிய மழை வரும்போல இருக்கு.” அவள் திடுக்கிட்டுக் குரல் வந்த திசையைப் பார்த்தாள் வேலிக்கப்பால் ஓர் ஆண் நின்றிருந்தான். முன்பின்பரிச்சயமில்லாத வன். நிச்சயம் அந்தக்


மண்ணின் மைந்தர்கள்

 

 சுபத்ராவுக்கு எதை நினைத்தாலும் அலுப்பாக இருந்தது. இந்த வீட்டில் இருந்த எல்லா ஜீவராசிகள் மீதும் கொல்லையிலிருந்த பசு மாட்டிலிருந்து வாசலில் வெயிலில் காய்ந்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாமனார் சங்கர்தாஸ்வரை – ஆத்திரம் வந்தது. அது சாதாரண ஆத்திரம் இல்லை – கத்தினோம் கொட்டினோம் வடிகாலில் கரைத்தோம் என்பதற்கு – இது ஒரு சொல்லத் தெரியாத ஊமை ஆத்திரம். வெடித்தால் அவளைப் பைத்தியக்காரி என்று பசுமாடுகூடச் சிரிக்கலாம். இந்த வீட்டிலே நடக்கிற எல்லா அசட்டுத் தனங்களுக்கும் அந்தக்


கொலை

 

 லேசாகக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது சோமையா தாத்தாவுக்கு வயிறு மட்டும் உறுமிய வண்ணம் இருந்திராவிட்டால், சுகமாகத் தூக்கம் வந்திருக்கும். உச்சிவெயிலானாலும் உக்கிரம் இல்லை. முன்யோசனையாக என்றோ வீட்டின் நடு முற்றத்தில் நட்டிருந்த வேப்பம் செடி இன்று நெகுநெகுவென்று கிளை பரப்பி கோவர்த்தன மலை மாதிரி குடையாய் விரிந்து சூட்டைத் தணிக்கிறது. அதன் நிழலில் சோமையா தாத்தாவின் கயிற்றுக் கட்டில் ஒரு நிரந்தர அம்சம். வீட்டின் பின்புறம் இருக்கும் காய்கறித் தோட்டத்தை மேற்பார்வை பார்க்கவோ, அல்லது களத்து


சுவர்

 

 ராஜேஷ்குமார் விட்டத்தில் எதையோ தேடியபடி ‘லெதர்’ சோபாவில் தலையைச் சாய்த்து அமர்ந்திருந்தான். அவன் மிகவும் பிரயாசைப்பட்டு மறைக்கப்பார்த்த வயதும், அதன் இயல்பான தளர்ச்சியும் ஓர் இரவின் தூக்கம் நழுவியதில் திரை கிழிந்து போன மாதிரி எட்டிப் பார்த்தன. முகத்தில் லேசான உப்புசமும், கண் களுக்கடியில் கரிய திட்டும். அவன் ஆயாசத்துடன் விட்டத்திலிருந்து பார்வையை எடுக்காமலே கன்னங்களைத் தேய்த்து விட்டுக் கொண்டான். இன்றைக்கு மசாஜுக்குப் போக வேண்டும். நன்றாக எண்ணெயை நீவி விட்டுக்கொண்டு ‘ஸானா’ ஆவிக் குளியலில் முங்கி