கதையாசிரியர் தொகுப்பு: வாசுகி நடேசன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஞானி

 

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது விளைநிலம்.. கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பெரிய காய்கறித் தோட்டம்…கால்வாயைக் கடந்தால் பெரிய வயல் நிலம்… சாமியாரின் தந்தைவழி முதுசமாய் அவரை வந்தடைந்தவை… அவர் ஒரு இயற்கை விவசாயி…அவரது இடைவிடாத உழைப்பில் செழித்து இருக்கிறது பூமி.. சாமியார் விளைந்தவற்றில் தமக்கு உயிர்வாழ சிறிதளவு எடுத்துவிட்டு மிகுதி அனைத்தையும் ஊர்ப்பாடசாலை மாணவருக்கு மதிய உணவுக்காய் வழங்கிவிடுவார்..அவர்


சடங்கு

 

 ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய கனவுகள் காண்கிறாள் போலும் … சுஜா …பத்துவயதுதான் ஆகிறது…சிறுமிதான் . ஆனாலும் வளர்த்தியில் அவள் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் என்னவோ மிகவும் விரைவாகப் பூத்துவிட்டாள். அங்கங்களில் திரட்சியும் பூரிப்பும் கொண்டபோதே ஈஸ்வரிக்கு விளங்கிவிட்டது. இவள் விரைவாகக் குந்திவிடுவாள் என்று.மகளின் கூந்தலை கோதுகிறாள் .என்ன அவசரமோ ..இந்த இயற்கைக்கு…? ஈஸ்வரியின் மனம் குளிர்ந்து புன்னகையாய் மலர்கிறது


ஆதிமந்தி ஆட்டனத்தி

 

 ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை, ஆட்டனத்தி பேரழகன். மலையை ஒத்த தோள்களையுடையவன் அவன் ஊர்த்திருவிழாவின் போது மள்ளரோடு கழல்கள் அணிந்த தன் கால்களால் சுழனறு சுழன்று ஆடிய அழகு கண்டு மலைத்து நின்றாள் ஆதிமந்தி..அன்று அவன் நினைவால் அவளால் துணங்கைக் கூத்தில் கூட சரிவரப் பங்குகொள்ள முடியவில்லை. ஓரத்தில் நின்று துணங்கைக்


இயலாமை

 

 வசந்தகாலப் பரபரப்பில் இத்தாலியத் தெருக்கள்… நள்ளிரவு கடந்த பின்பும் தெருக்களில் சன நடமாட்டம் சிறிதும் குறையவில்லை. கடல் அலையின் ஒசை காதுக்கிதமாய் ஒலிக்கிறது. கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் “ போச்சே” பார்க்கில் அகிலாவும் அவள் தோழிகளும் …மிக மகிழ்ச்சியாய்ப் பொழுதைப்போக்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனையோ பொழுது போக்கு ஊடகங்கள் இருந்த போதும் நண்பர்கள் கூடிக் கதைப்பதில் தனிச் சுகம் இருப்பதாக அகிலா எண்ணிக்கொள்கிறாள். பல சமயங்களில் அக்கதையில் சாரம் இருப்பதில்லை. ஆனாலும் மன இறுக்கங்களைத் தளர்த்திக் கொள்ள


கடவுள் மீண்டும் வருவாரா…?

 

 கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு. எம்மால் உருவாக்கப்பட்ட பூமிக்கு ஒருதடவை போய்ப் பார்க்கலாமே என்று அங்கு வருகிறார். அவர் சிந்தையில் ஏதோ தட்டுப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார், ஒரு டைனோசரின் எலும்பு அது. அட, இந்த டைனோசரையாவது அழிக்காமல் விட்டிருக்கலாமே. இவையிருந்திருந்தால் இவற்றைப் பார்த்தாவது பொழுதைப் போக்கியிருக்கலாமே. அவர் மனம் இப்பொழுது ஏங்குகிறது. இதுவரை ஒர் அறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள விலங்குகளை


பாவ மன்னிப்பு

 

 வானம் பிளந்து கொண்டதோ என்னமோ …கருக்கொண்ட மேகங்கள் சுமைதங்காது நீர்த்தாரையைத் தெறிக்கவிட்டிருந்தன…..மேகங்களின் கூச்சல் பொறுக்காது மின்னல் சாட்டை கொண்டு வீசிற்று… கடல் அலைகள் பொங்கி வானத்தைத் தொட்டு விடத்துடித்தன ….காற்று ஆவேசம் வந்தது போலச் சுழன்று அடித்தது…..பிரளய காலம் இவ்வாறுதான் இருக்குமோ… வெளி ஆரவாரங்கள் எவையும் அவர் மனதைத் தொடவில்லை ஆனாலும் அவர் மனதிலும் புயல் அடித்துக் கொண்டிருந்தது.அப்புயலில் அகப்பட்ட சிறு இலை போல் அவரது மனம் அமைதியின்றி அலைக்கழிந்து கொண்டிருந்தது.அமுதாவின் உயர்ந்த உள்ளத்தின் முன்னே தான்


ஊனம் மனதுக்கல்ல

 

 நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப் போலும். அமைதியாக இருந்தது. மார்கழி மாதக் குளிருக்கு போர்வையைத் தலைவரை மூடிக்கொண்டு படுத்திருந்த சந்திரன் விழித்துவிட்டான். ஆனால் கட்டிலில் இருந்து எழுந்து படிக்க மனம் அங்கலாய்த்தபோதும் உடலும் கண்களும் இன்னும் கொஞ்ச நேரம் படுத்திரு என அவனைக் கெஞ்சிக்கொண்டிருந்தன. அம்மாவின் அதட்டலோடு கூடிய அழைப்பை எதிர்நோக்கி பயத்துடன் காதுகள் கூர்மையாயின.நல்லவேளை அம்மா அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.ஆறுமணிவரை


ஆலய தரிசனம்

 

 அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில் விரிந்து முகத்தை மேலும் பொலிவுபடுத்தியது. வாழ்வினை நிறைவாக அனுபவித்துப் பூர்த்தியாக்கிச் சுமங்கலியாகப் போகிறேன் என்ற நினைப்பு அவரது புன்னகைக்குக் காரணமாகலாம். இந்தக் காலத்தி பூட்டப்பிள்ளையைக் காணும் வரை வாழ்வது சாதாரண காரியமா? அதிக நோயாலும் அறுபது ஆண்டுகளாகத் தம் ஜீவனோடு கலந்து விட்டவளின் பிரிவைத் தாங்க முடியாமலும் உண்டான துயரங்களைத் தன்னுள் அடக்கி அந்த நினைவுச்


பாப்பாவுக்கு ஒரு நாள் கழிகிறது

 

 மகிழ்ச்சியான கனவில் திளைத்திருந்த பாப்பாவுக்கு அம்மாவின் அதட்டலான அழைப்புக் குரல் நாராசமாய் விழுந்தது. அவளின் இனிய கனவினை அது கலைத்து நினைவுக்கு இழுத்து வந்தது. “பாப்பா …பாப்பா எழும்பு. எழும்படி நேரம் ஐஞ்சாச்சு…” பாப்பா சோம்பல் முறித்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள். அவள் எழும்புவதற்கே காத்திருந்தது போல சுவர்க்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட சின்னக்குருவி ஐந்து தடவை கடிகாரத்தைக் கொத்தி ஒலி எழுப்பிவிட்டு மறைந்து போகிறது. லண்டனில் இருந்து மாமா அனுப்பிவைத்த கடிகாரம் அது.வந்த நாளிலிருந்து நாள் தவறாது தனது


கொட்டில்

 

 அப்புவின் கண்கள் அந்தக் கொட்டில் இருந்த இடத்தில் நிலைத்திருந்தன. முன்பு அது இருந்த இடத்தில் மண்மேடு. சுடலைப் பிட்டி போல…… அப்பு என அழைக்கப்படும் அப்புத்துரை அறுபத்தைந்து வயதைதக் கடந்தவர். தமக்குச் சீதனமாக வந்த வீட்டின் முன்னால் தமது இருபத்தைந்தாவது வயதில் அந்தக் கொட்டிலைச் சிற்றாள் ஒருவரின் உதவியுடன் தமது கையாலேயே போட்டவர் அவர். இயல்பாகவே வலுவான உடல்…. தோட்டத்தைக் கொத்திக் கொத்தி வைரம் பாய்ந்த கைகள் . எதையும் சாதிக்கத்துடிக்கும் இளமை வேகம். அப்பு தாமே