Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: வல்லிக்கண்ணன்

76 கதைகள் கிடைத்துள்ளன.

பெரிய மனசு

 

 அந்தச் சிறு உருவப் பெண் ஒரு அதிசயம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் அதற்கு வயசு ஆறு அல்லது ஆறரைதான் இருக்கும். அந்த வயசுக்கு ஏற்ற வளர்ச்சி கூடப் பெற்றிருக்கவில்லை அதன் உடல். “கத்தரிக் காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி” என்பார்களே. அதை விளக்குவதற்கு ஏற்ற உயிருள்ள உதாரணமாக ஓடியாடித் திரியும் அந்தக் குழந்தையின் பெயர் என்னவோ- எனக்குத் தெரியாது….. நாகரிக யுகத்தின் தவிர்க்க முடியாத பரிணாமங்களில் ஒன்று “ஓட்டல்களை நம்பி உயிர்வாழும்


கொடிது, கொடிது!

 

 “ஏய், விளையாட்டில் ஜெயிக்கிறவன் மற்ற எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணும். ஆமா” என்று கத்தினான் ஆத்ம கிருஷ்ணன். ஆமா, ஆமோ ஆமா’ என்று கூப்பாடு போர்ட்டார்கள் மற்றவர்கள் முருகையா குதிக்கவுமில்லை; கூப்பாடு போடவுமில்லை. எனினும் அவனும் விளையாட்டில் கலந்து கொண்டான். ஓட்டப் பந்தயம் மும்முரமாக நடந்தது. முருகையா தான் முதலில் வருவான் என்று அநேகர் எண்ணினார்கள். ஏமாந்தார்கள். எல்லோரையும் ஏமாற்றிவிட்டான் அவன். இரண்டாவதாகத்தான் அவன் வந்தான். “கொஞ்சம் மூச்சுப்பிடித்து ஓடியிருந்தால் நீ முதல்லே வந்திருக்கலாம் முருகையா!” என்று


மனோபாவம்

 

 பால்வண்ணம் பிள்ளையைப் பார்த்தவர்கள் உறுதியாக எண்ணினார்கள். அவர் பிழைத்து எழுவது கஷ்டம் என்று. டாக்டருக்கு நிச்சயமாகத் தெரிந்துதானிருந்தது. பிள்ளையின் வியாதி குணமாவது அரிது என்பது. இருப்பினும் அவர் தமது கடமையை ஒழுங்காகச் செய்யத்தானே வேண்டும்? ஆகவே டாக்டர், பிள்ளையை அடிக்கடி பரிசோதித்தார்; வேளை தவறாமல் குறிப்பு எழுதி வைத்தார். மருந்து கொடுத்தார். முறைப்படி “ஊசி போட்டு” நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை அவர். வாழ்க்கையில் “ஸ்ரீமதி பால்வண்ணம் பிள்ளை” என்ற அந்தஸ்தைப் பெற்று அவரோடு கூட வாழ்ந்து


கோளாறு

 

 சாவித்திரிக்கு ஒரே பரபரப்பு. அவள். ஏற்பாடு செய்திருந்த விருந்து வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்றுதான். பிறர் மதிப்பையும் பாராட்டுதலையும் பெறத் தவிக்கிற எந்த அம்மாளுக்கும் இயல்பாக இருக்கக்கூடிய ஆசை தானே அது! சாவித்திரி சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்து விட்டவளும் அல்ல; தாழ்ந்து கிடப்பவளும் அல்ல. மத்தியதர வர்க்கத்துக் குடும்ப விளக்குகளுக்குச் சரியான பிரதிநிதி அவள், பிறந்த இடத்திலோ, புகுந்த இடத்திலோ செல்வம் குப்பை மாதிரிச் சிதறிக் கிடக்காவிட்டாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே பிறந்து வளர்ந்து


உயர்ந்தவன்

 

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ் சாமே! அப்படி யென்றால், அநேக இடங்களில் பாத்திரம் துலக்கியும் வீடு பெருக்கியும் வயிறு வளர்த்து வந்த பார்வதிக்கு அவள் மகன் ராசா ஆகவும், “துரை ஆகவும் விளங்கியதில் தவறு இல்லைதானே? “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று எண்ணிக்கொள்ள உரிமை பெற்றிருந்த போதிலும், பார்வதி தன் மகனை மன்னன் ஆக்கி மகிழ ஆசைப்பட்டதே இல்லை. வருங்காலத்திலே அவன் ஒரு மந்திரியாகி “ஜெயம் ஜெயம் என்று வாழ்ந்து விடுவான் என்றுகூட அவள் கனவு


பிரமை அல்ல

 

 பண்ணையார் சூரியன் பிள்ளை தமது அனுபவத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். சொல்வதற்கும் தயக்கமாக இருந்தது அவருக்கு. தான் ஆலோசனை கோரி அதைச் சொல்லப் போக, மற்றவர்கள் கேலி செய்து பரிகாசிக்கத் துணிந்தால் தனது கௌரவம் என்ன ஆவது என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. ஆகவே, ‘பார்க்கலாமே, பார்க்கலாமே!’ என்று தன் எண்ணத்தை ஏலத்தில் விட்டுவந்தார் அவர். ஆனால் தொடர்ந்து நாள்தோறும் அதே நிகழ்ச்சி எதிர்ப்படவும் அவர் உள்ளம் குழம்பியது. உணர்வுகள் தறிகெட்டு, உடல் பலவீனம் ஏற்பட்டது.


இளகிய மனசு

 

 மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு. அப்படித்தான் சொல்லி வாந்தார்கள் அவளை அறிந்தவர்கள் எல்லோரும். அவளும் அவ்வாறு எடுத்துக் சொல்லத் தவறுவதில்லை. பெரிய இடத்தைச் சேர்ந்தவள் அவள். உருவத்திலும் அவள் பெரியவள்தான். பொதுவான ஸ்திரீ தர்மத்தை அவளும் அனுஷ்டித்து வந்தாள். அதனால் அவளது வயது, நின்றுபோன கடியாரத்தின் முட்கள் போல, கிழிக்கப்படாத காலண்டர் தாளைப்போல, ஒரே எண்ணில் நின்றிருந்தது. அஞ்சாறு வருஷங்களாகவே அவள் வயது இருபத்துநான்காகத்தான் இருந்தது! அதற்காக அவளுடைய உடல் வளர்ச்சியுறாமல் போகவில்லை. கேவலம் நூற்றைம்பது


ஒரே ஒரு மனிதன்

 

 ஒரு தெரு. ஒதுக்குப்புறமான தெரு அல்ல. போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது. நாகரிக யுகத்தின் ஜீவத் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையராக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக்கொண்டு தானிருந்தது. தெருவின் ஒரு இடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது. அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல; ஒரு ஓரமும் அல்ல. அந்த நாய் நடு வீதியில் காரிலோ வண்டியிலோ அடிப்பட்டு, வேதனையோடு நகர்ந்து நகாந்து தெரு


நல்ல காரியம்

 

 உலகம் மிகவும் பயங்கரமானது நண்பரே, மிகவும் பயங்கரமானது. “வாழ்க்கை மிக மிகக் கொடியது நண்பரே, மிக மிகக் கொடியது”. ஒவ்வொருவரும் எத்தனையோ தடவைகள் சொல்லி விட்ட, அல்லது ஒரு தடவையாவது சொல்ல விரும்புகிற அல்லது சொல்லியே தீரக்கூடிய இந்த வார்த் தைகளை இப்பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையென எடுத்துக்கொண்டு “ஆர்க்கிமிடீஸின் பேரன் மாதிரி நான் ஓலமிடத் துணிந்திருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பம்பாயிலிருந்து எனது நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள கடிதம் இப்படி ஆரம்பமாகிறது. எனக்கு எப்பொழுதாவது


பொம்மைகள்

 

 ரோட்டோரத்தில் ஒரு வீடு. அதில் மூன்று பெண்கள்…. நாகரிகம் கம்பீரமாகப் பெருகி ஓடும் பெரிய ரோடு அது. நாகரிகத்தை, அதன் வளர்ச்சி வேகத்தை, மாறுதல்களின் கதியை எல்லாம் அளந்து காட்டும் விசேஷ “மீட்டர்”கள் அந்த மூன்று பெண்களும். அவ் வீட்டில் – “பெரிய மனிதர்” என்ற தோற்றத்தோடு விளங்கிய அப்பா இருந்தார். செல்வத்திலே பிறந்து, சீரும் செழிப்புமாக வளர்ந்த “பெரிய வீட்டுப் பெண்” என்று தோன்றும் அம்மா இருந்தாள். இன்னும் யார் யாரோ இருந்தார்கள். பெரிய குடும்பம்