Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: வல்லிக்கண்ணன்

76 கதைகள் கிடைத்துள்ளன.

யாரைக் காதலித்தான்?

 

 தெருவில் வந்து கொண்டிருந்த சந்திரன் காதுகளில் அவ்வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவன் அந்த வீட்டை நெருங்குவதற்குச் சில அடி தூரமே இருந்தது. அவன் காதுகளை எட்டாது எனும் தைரியத்தில் தான் அந்தப் பெண் பேசியிருக்க வேண்டும். அவள் உரத்த குரலில் சொன்னது கணிரென்று அவனுக்குக் கேட்டது. “அதோ வருகிறாரே அவர் தினசரி இந்த வழியாகப் போகிறார். போகும்போதெல்லாம் இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டே போகிறார்.” கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, வாசலுக்கு வெளியேயுமில்லாமல் வராந்தாவிலுமில்லாமல், உள்ளும் புறமுமாக நின்று


வெயிலும் மழையும்

 

 சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான். விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள் தானே. சீதைக்குத் தன் மகள் மீது அதிக அன்பும் ஆசையும் உண்டு. அவளைப் பற்றி தாய் கொண்டிருந்த பெருமைக்கும் அளவு கிடையாது. “எங்க சொக்கம்மா அதைச் சொன்னாள். எங்க சொக்கு இதைச் செய்தாள்” இப்படி ஒரு நாளைக்கு


கொடுத்து வைக்காதவர்

 

 சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்” என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். “பாவம், கொடுத்து வைக்காதவர்” என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள். திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: “நம்ம ஜாதக விசேஷம் அப்படி. ஐயாவாள் ஒரு நிமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே கிடைத்திருக்கும். எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன், கொடுத்து வைத்தவன்,


காதல் போயின்?

 

 மாறி ஆடும் பெருமாள் பிள்ளைக்குக் கோபம் என்பது வரவே வராது அவரை நன்கு அறிந்தவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம். “ஐயா, உம்முடைய பெயர் மாரியாடும் பெருமாள் என்றே எழுதப்பட வேண்டும். அதாவது, மாரியம்மன் வந்து ஆடுகிற பெரிய ஆள்! அதை விட்டுப் போட்டு, நீர் மாறியாடும் என்று எழுதுவதன் வயணம் என்ன? ஆட வேண்டிய பூடத்தை விட்டு விட்டு இடம் மாறி ஆடிய பெருமாளா? அல்லது ஒரு காலில் நின்று ஆடிக் களைத்து அப்புறம் கால் மாறி


பேபி

 

 “தட்டுங்கள், திறக்கப்படும்” என்கிற வாக்கு பேராசிரியர் வீட்டில் செலாவணி ஆகாது போலும்! நானும் எத்தனையோ தடவைகள் தட்டிவிட்டேன். இன்னும் கதவு திறக்கப்பட வில்லையே? யாரது, ஏன் என்று கேட்பாருமில்லையே!” பேராசிரியர் பரமசிவம் அவர்களின் வீட்டுக்கதவை தட்டி அலுத்துவிட்ட கைலாசத்தின் மனம் இப்படி முணுமுணுத்தது. “இதற்காகத்தான் நான் பெரிய மனிதர் எவரையுமே பார்க்கப் போவது கிடையாது. பெரிய மனிதர்கள் வீட்டில் அடையா நெடுங்கதவும், அஞ்சல் அஞ்சல் எனும் கரமுமா காத்திருக்கும்? அடைத்த கதவைத் தட்டித் தட்டி நம் கைதான்


ஒரு காதல் கதை

 

 அப்பொழுது நான் தூங்கவில்லை – தூக்கக் கிறக்கத்திலே தோன்றிய சொப்பனமாக இருக்கும் என்று அதைத் தள்ளி விடுவதற்கு. உண்மையைச் சொல்லப் போனால் அப்போது நான் விழித்திருக்கவும் இல்லை; கண்களை மூடிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்து கிடந்தேன், முதுகெலும்பு இல்லாத ஜீவன் மாதிரி நாற்காலியில் சரிந்து சாய்ந்தபடி. அப்படி என்ன பலமான யோசனை என்றால், சுவையான கதை என்ன சொல்லலாம்; ஒரு கதை அவசியம் வேண்டுமே என்கிற வேதனைதான். பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயது பெண் பர்வதகுமாரி எனது சிநேகிதி.


வாழ விரும்பியவள்

 

 “மாதவிக் குட்டி பார்ப்பதற்கு மான்குட்டி மாதிரி இருக்கிறாள். பூச்செண்டு போல் குளுமையாய், வாணமயமாயத திகழ்கிறாள். அதெல்லாம் சரிதானப்யா. அவள் மோகனப் புன்னகையையும், காந்தக் கண்ணொளியையும், கண்டு நீர் தப்பித் தவறி அசட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர். உண்மையில் அவள் நெருப்பு ஐயா, சுட்டெரிக்கும் நெருப்பு!” இப்படித்தான் எச்சரிப்பார் கிளார்க் பரமசிவம். சக குமாஸ்தாக்களில் எவராவது ஒருவர் அவரிடம் மாதவியைப் பற்றி அவ்வப்போது பேச்செடுப்பார்கள். அல்லது, அவரைக் கண்டு பேச வருகிறவர்களில் யாரேனும் மாதவிக் குட்டியின் “நிலவு செய்யும் முகத்தையும்,


நண்பர்கள்

 

 தெற்கு வடக்காக அகன்று நீண்டு கிடந்த மேலத்தெருவின் கிளைபோல் கிழக்கு நோக்கி ஒடுங்கலாகப் பிரிந்து சென்ற நடுத்தெருவில் திரும்பி அடியெடுத்து வைத்த ஆண்டியா பிள்ளையின் நடையில் தனியொரு வேகம் சேர்ந்தது. கைலாசம் பிள்ளையை சந்திக்கப் போகிறோம் என்ற துடிப்பு, அவர் கால் செருப்பின் “டப் – டிப்ட் ஒசையிலேயே உயிரொலி கொடுப்பது போல் தோன்றியது. “அண்ணாச்சியை பார்த்து ஒரு வருசத்துக்கு மேலே ஆகுதே. இவ்வளவு நீண்டநாள் நான் இந்தப்பக்கம் வராம இருந்ததே இல்லை. ரெண்டு மாசத்துக்கு ஒருக்க,


சொல்ல முடியாத அனுபவம்

 

 சுயம்புலிங்கத்துக்கு தீராத மனக்குறை. யார் யாருக்கோ என்னென்ன அனுபவங்கள் எல்லாமோ எதிர்ப்படுகின்றன; தனக்கு ரசமான, ஜோரான, சுகமான அனுபவம் ஒன்று கூடக் கிட்டமாட்டேன் என்கிறதே என்றுதான். நினைக்க நினைக்கக் கிளுகிளுப்பூட்டும் இனிய நிகழ்ச்சிகள். சொல்லச் சொல்ல வாயூறும் – கேட்பவர்கள் காதுகளில் தேன் பாய்ச்சும் – மற்றவர்கள் நெஞ்சில் ஆசைக் கள்ளைச் சுரக்க வைக்கும் – ஒரு சிலரது உள்ளத்திலாவது பொறாமைக் கனலை விசிறிவிடும் அற்புதமான அனுபவங்கள். ஐயோ, பேசிப் பேசிப் பூரித்துப் போகிறார்களே பல பேர்!


தோழி நல்ல தோழிதான்!

 

 “உந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!” என்று சொல்லி, வளைகள் கலகலக்கும் படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா. “என்னத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?” என்று சிடு சிடுத்தாள் தங்கம். அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: “நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. எள்ளுக்குள்ளே எண்ணெய் கலந்திருக்கிறது. உன் மனசுக்குள்ளே காதல் புகுந்திருக்கிறது. இதை எல்லாம் தான்.” தங்கம் பதில் பேசவில்லை. தோழியின் விழிகளைச் சந்திக்க மறுத்த அவளுடைய அஞ்சனம் தோய்ந்த கண்களும்,