கதையாசிரியர் தொகுப்பு: வசந்தகிருஷ்ணன்.ஆ.

6 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பா(ராத)ர்த்த உறவு

 

  மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும் என்னை அண்டா வயது அது. மனித ஜென்மமும் சில காலங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கும் பருவம் என்று ஊரார் முழக்கமிடும் வயது அது. அரை கை சட்டையும் அரை கால் டவுசரும், அதுவும் முட்டிக்கு மேலேயே முடிந்துவிடும் டவுசரை போட்டுக்கொண்டு, ஆபாசம் பற்றி அறியாமல் சுற்றித் திரிந்த வயது அது. தத்தித்தத்தி பேசும் மொழியும்


கைக்கிளைப்பதுமை…!

 

  கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..? என் பெயர் மோகன். மாநிறம், மெலிந்த தேகம், முன்நெற்றி கொஞ்சம் ஏத்தமா இருக்கும், “உன்னோட கண்கள் எப்பவுமே என்ன வசியம் செய்யுற ஏவல் பொருள்ன்னு” கீதா சொல்லிகிட்டே இருப்பா, அதே மாதிரி என்னோட சிரிப்பு ரம்யாவுக்கு ரொம்பவே பிடிக்கும். என்ன டா இவன் ஒரே பொண்ணுங்க பெயரா சொல்லிகிட்டே போறானேன்னு


ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்

 

  புதிதாக தார் மீட்டிய சாலை அது… வழியெங்கும் மரங்கள், அந்த மரங்களின் வாயிலாக ஆங்காகே எட்டிப் பார்க்கும் குறும்புக்கார வெயில். அந்த சாலையின் நான்கு வழி முனையின் இடது பக்கம் திரும்பினால், ‘பாரதி’ தெரு… அந்த தெருவில் வலதுபுறத்தில் நான்காவதாக இருக்கும் நீல நிற வீடு தான் ராமநாதனின் வீடு… மன்னிக்கவும் … ராமநாதன் வசிக்கும் வீடு… கதவைத் திறந்து உள்ளே மாடிப்படிகள் பத்தைக் கடந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு சிறிய அறை வரும்…


முதலிரவு

 

  நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்…? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து எப்படிலாம் கனவு கண்டிருப்பான்..? அட என்ன விடுங்க, நீங்க கனவு காணலையா…? இல்லன்னு சும்மா ஒரு நாகரீகத்துக்காக சொல்லிடலாம், ஆனா உண்மை என்னன்னு உங்க மனசுக்குத்தானே தெரியும்.? இப்பெல்லாம் பசங்க எவ்வவளவு அட்வான்சா இருக்காங்க? கல்யாணத்துக்கு முன்னையே எல்லாத்தையும் பார்த்துடுறாங்க, நானும் தான் இருக்கேனே? ‘தண்டக் கருமாந்திரம்’. சரி கல்யாணத்துக்கு முன்ன எதுவும்


காதலர்கள் – ஜாக்கிரதை

 

  “இன்னும் எத்தன நாள் தான் இப்படியே இருக்குறதா உத்தேசம்…?” என்று வழக்கம் போல் கேட்டான் ‘திரு’. ஆனால், இந்த விஷயத்திற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிடவேண்டும் என்ற தீவரம் அவன் குரலில் தொனித்தது..! “எப்படியே….?” என்று சற்றும் சளைக்காமல் எதிர் கேள்வி கேட்டான் ‘ராஜா’ “எனக்கு என்னவோ இது சரியா படல…. சீக்கிரமா உன் காதல அவகிட்ட சொல்லு….” “காதல பத்தி உனக்கு என்ன டா தெரியும்…. அதெல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுற காரியமா என்ன?”