கதையாசிரியர் தொகுப்பு: லா.ச.ராமாமிர்தம்

39 கதைகள் கிடைத்துள்ளன.

தாக்ஷாயணி

 

 மூங்கில் பாலத்தின் மேல் மூவரின் கனம் அழுத்தியதும் பாலம் க்ரீச் க்ரீச்சென்று தொட்டிலாடிற்று. பாலம் ஆடவும் பையனுக்கு ஒரே குஷி. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொப்புத் தொப்பெனக் குதித்தான். பாலம் ஐயோ ஐயோவெனச் செல்லமாய் ஓலமிட்டது. “வா, வா போகலாம்.” இரு அம்மா செத்தே” என்று வர மறுத்துத் தும்பை இழுக்கும் கன்றுக்குட்டி போல் அவள் கையைப் பிடித்து: இழுத்தான். “நேரமாயிடுத்தே; அப்பா முன்னாலே போறாரே “அதெல்லாம் முடியாது, வரமுடியாது, போ” என்று பையன் தலையை


அபூர்வ ராகம்

 

 வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி, கோட்டையைப் பிடித்து ராஜகுமாரியைப் பரிசிலாய் மணந்த ராஜ குமாரனைப்போல் நான் அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள் முன்னதாகவே வந்து நடத்திவைத்த முகூர்த்தத்தில் மணந்து கொண்டவர்கள் தாம். ஆகையால் இறுதி


சுமங்கல்யன்

 

 “ஏவ் – ஏவ்!” இடி குமுறுவது போன்று ஒரு ஏப்பத்தை விட்டு, தொப்பையைத் தடவி, சற்று எட்டவிருந்த செல்லத்தைக் கிட்ட நகர்த்தி… இன்றைய சமையலே வெகு ஜோர் – பரவாயில்லை. குட்டி கை வாயிக்கிறது! மைசூர் ரஸமும், டாங்கர் பச்சடி யும், அந்த கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும் நன்னா அமைஞ்சு போச்சு. இந்தக் கத்திரிக்காயிருக்கே , இவள் திருத்திய மாதிரியே அவாதி. கதம்ப சாம்பாருடன் சேர்த்தாலோ? மொச்சைப் பருப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, வெங்காயம் எல்லாம் ஒன்றாய்ப்


எழுத்தின் பிறப்பு

 

 முதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு முன்னர், உலகம் உற்பவிக்கு முன்னர்— எங்கும் பிரம்ம மயம். பிறகு வானம், வானத்தின் முழு நீலம், பூமி, புனல், புல், பூண்டு, செடி கொடி – பரம், பல்வேறு விதமாய்ப் பரிணமிக்கும் பல்வேறு உருவங்கள்


ரயில்

 

  வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ஆகாயத்தின் முழு நீலம், ஒரு சமயம் அதில் அடித்த பஞ்சைப் போன்ற வெண்மேகம், ஒரு சமயம் அத்தனையையும் மறைக்கும் புகைப்படலம். இத்தனைக்குமிடையில், அத்தனையினதும் நடு நாடி போல், அலுப்பற்று ஒரே நிதானமான வேகத்தில்,


கணுக்கள்

 

 அம்மாவின் மடி நிறையக் காய், மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கத்தில் ஏணியைத் திருப்பிப் போட்டாள். நாங்கள் பந்தலுக்கடியில் விளையாடிக் கொண்டிருந் தோம். நான், அம்பி, பாப்பா எங்கள் தலைக்குமேல் காய் கொத்துக் கொத்தாய்த் தொங்கிற்று. அதுவும் இந்தத் தடவை சரியான காய்ப்பு: தினம் மாற்றி மாற்றி அவரைக்காய் கறி, அவரைக்கா புளிக்கூட்டு, அவரைக்காய் பொரித்த கூட்டு, அவரைக்காய் பருப்பு உசலி அப்பா உள்ளேயிருந்து வந்தார், வழக்கப்படி வலது கையால் இடது


கொட்டு மேளம்

 

 பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். “என்னம்மா பண்ணப்போறே?” “கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ.” திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள். “என்னம்மா சொல்றே? ஐயா எங்களை உசிரோடெ வெப்பாரா?” “அவன் கிடக்காண்டி இருந்திருந்து இன்னிக்கும் மாடியிலே இருப்பேனா? என்னை இதிலே வெச்சு மெதுவாக் கீழே இறக்கி அவாள்ளாம் வரத்துக்கு முன்னாலே கூடத்து உள்ளே கொண்டு


மஹாபலி

 

 சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு முறியடித்த கோரக் களை முகத்தில் கூத்தாடியது. போகப் போக, ஒரு காகம் பறந்து வந்து நெற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கொத்த முயன்றது. பின்னாலேயே ஈக்கூட்டங்களும் எறும்புச் சாரிகளும் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மூக்கிலும்


பூர்வா

 

 இப்பொழுது அவள் என் கனவில் வந்தாள். ஏளனம் செய்யும் அவள் புன்னகையுடன் என் பின்னால் வந்து என் பேரை என் காதண்டை சொல்லி, என் தோளைத் தொட்ட மாதிரி இருந்தது. ‘பூர்வா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டேன். கண்கள் கண்ணிரில் நனைந்திருந்தன. தூக்கத்திலும் என்னையும் அறியாமல் நான் அழுதிருக்கிறேன். ‘டாங்’– எங்கேயோ மணி ஒன்று அடித்தது. இனி விடியும் வரையில் தூக்கம் எனக்கு வரப் போவதில்லை. திரும்பத் திரும்ப


ஏகா

 

 அன்றும் என்றும் போல்தான் பொழுது விடிந்தது. வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி. “ஏகா, ஏகா, எழுந்திரேண்டி! ஏ ஏகா, ஏகா—ஐயோ திரும்பிப் படுத்துட்டாளே! ஏகா, கண்ணைத் திறவேண்டி—! ஐயோ, இவளை எழுப்பி எழுப்பி மானம் போறது, பிராணன் போமாட்டேன்கறதே! ஏ—கா!” “கா—கா!” காகங்கள் கேலி செய்தன. ஏகாவை எழுப்புகிறேன் என்றால் அர்த்தமில்லை. ஒவ்வொரு சமயமும் சதைபோல் அவளை உறக்கத்திலிருந்து பிய்த்தாக வேண்டும். ஆனால், ஏகா எழுந்தபின் அவள் உறங்குவதோ, அவளை உறங்க வைப்பதோ, அவளை எழுப்புவதைவிடக்