கதையாசிரியர் தொகுப்பு: லா.ச.ராமாமிருதம்

21 கதைகள் கிடைத்துள்ளன.

ராக் த்ரோக்: நம்பி

 

  அபிராமி. அன்றொரு நாள், கிணற்றில் குடி ஜலம் மொள்ள வந்தாயே, நினைவிருக்கிறதா? எத்தனையோ முறை வந்திருக்கிறாய்? ஆனால் நான் குறிப்பிடுவது அந்த ஒரு நாளைத்தான். உன் திருமணத்தன்று, உன் கடைசிப் பிரயாணத்தில் உன் வீட்டுக் கிணற்றடிக்கு நீ போகும் வழியில் என்னைப் பார்த்த பார்வைக்கு இன்னமும் அர்த்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். உன் மணப்பந்தலின் தோரணங்கள் என்மேல் உராய்ந்து கொண்டிருக்கும் பிரமை இன்னும் தட்டுகிறது. நாம் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வயது ரெண்டுங்கெட்டான் வயது. அதில் ஆண்களின்


ராக் விளம்பித் அபிராமி

 

  தினமும் படுக்கப் போகுமுன், ஒரு வெகுநாளைய பழக்கம், வானத்தைப் பார்த்துக் கொள்வேன். ஜன்னலண்டை கட்டில்: அல்லது கட்டிலண்டை ஜன்னல், இப்படி ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம். அல்லது! ஜன்மேதி ஜன்மமாய் ஆனால் ஜன்மாவுக்கே புரியாமல், அதன் அடி உணர்வில், அதன் அடிப்படை பயம். அடுத்த முறை எட்டிப் பார்க்க வானம் இருக்குமோ? யோசித்துப் பார்க்கையில், இது ஒன்றும் அவ்வளவு பயித்தியக்கார பயம் அல்ல. பரஸ்பர ஆகர்ஷணத்தில் தானே ஒன்றையொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருக் கின்றன. கிரகங்கள்! இந்த


ஒரு வழக்கு

 

  எனக்கு இந்தப் பகுதி, வாசகனுடன் அளாவ ஒரு சந்தர்ப்பம்; திண்ணை என் முன்னுரைகளை அப்படித் தான் கான் இதுவரை பயன்படுத்தியிருப்பதாக எனக்கு எண்ணம். (மற்றவர் என் எழுத்துக்கு வழங்கியிருக்கும் முன்னுரைகளை விடுங்கள்.) எனக்கு உன்னுடன் நெடு நாளாக ஒரு வழக்கு. ஆமாம், திருமோ தீராதோ, தீர்க்க முடியுமோ முடியாதோ, சொல்லியாவது ஆற்றிக் கொள்ளலாம் அல்லவா? ஆறுவது உன்கையில்தானிருக்கிறது. சொல்லாமல், என் ககதி உனக்கு எப்படித்தான், எப்போத்தான் தெரிவது? முதலில் ஒரு உபகதை; உண்மைக் கதை: அமெரிக்காவில்


புற்று

 

  1947-1951 : என் எழுத்தின் கோபா வேசத்தின் உச்சக் கட்டம் என்று தோன்றுகிறது. இந்தக்கதை அந்தக் காலவரையைச் சேர்ந்தது தான். இது வெளிவந்து, கொஞ்ச நாட்களுக்கு என் நண்பர்கள் என்னைப் ‘புற்று’ என்றே அழைத்து வந்தார்கள். இப்படியும் ஒரு கற்பனையா? என்று அவர்களுக்குப் பாதி ஆச்சர்யம், பாதி அச்சம். ஒவ்வொரு கதையும், எழுத்தாளனின் அவ்வப்போதைய மனநிலை-என்று இதை ஒரு பொது வாக்கு மூலமாக (Statement)ச் சொல்லி விடலாமா என்று எனக்கு நிச்சயப் படவில்லை. Subjective Writingக்கு


உத்தராயணம்

 

  உத்தராயணம் ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டு விட்டால் முதலில் உணர்வது தன் தனிமை தான். நியாயமிருக்குமிடம் தெரிந்தும், தான் எடுத்துச் சொன்னால் செல்லாது என்ற தலை குனிவில் அடைத்துப்போன வாய். பாரதயுத்தம் இன்னமும் ஓயவில்லை. நாம் இன்னும் குருகேஷத்ரத்தில்தானிருக்கிறோம். காங்கேயர்கள் (பீஷ்மர்கள்) வீழ்ந்தவர்கள் வீழ்ந்தபடி சாப்படுக்கை அன்று விரித்தது விரித்தபடி. “Tommy எங்கிருந்தோ ஒடி வந்து என் முகத்தை ஓரிருதடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை-