Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: லாவண்யா

6 கதைகள் கிடைத்துள்ளன.

மழை

 

  ‘ஹேய்’ உள்ளேயிருந்து வானுயரத்துக்கு எழுந்த ஒவ்வொரு கத்தலுக்கும் நாராயணனின் மனது உள்வரை போய்த் திரும்பி வந்தது. நிச்சயம் பிரம்மைதான், வெறும் மனதானாலும் நூறு ரூபாய் டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாதென்று கட்டாய உத்தரவாகியிருந்தது. சிலிர்த்தெழுந்த ùக்கைகளை யாரோ பலவந்தமாய் பிய்த்துப் பிடுங்கியதுபோல் எல்லா ஆரவாரமும் எழுந்த வேகத்திலேயே அவனுக்குள் அடங்கிப்போனது. ‘ஹோய்ய்ய்’, அதற்குள் இன்னொரு ஆரவாரம். முன்னெப்போதையும்விட இது பெரிதாய் இருக்கிது. உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அவன் நெஞ்சு அடித்துக்கொண்டது. வேùன்ன, சிக்ஸரோ,


ஒரு கோயிலும் இரண்டு பெண்களும்

 

  பிரகாரத்தை மூன்றாவது சுற்று சுற்றிக்கொண்டிருந்த அக்காவை இமைக்காமல் பார்த்தாள் ப்ரியா. அப்படியே இருக்கிாள். இந்த இரண்டு வருடங்களில் கொஞ்சமும் மாற்மில்லை. அமைதியான முகம், சின்னதாய் குங்குமப் பொட்டு, தலையில் கொஞ்சமே கொஞ்சம் மல்லிகை, கையில் பூஜைக்கூடை, அதில் கொஞ்சமும் வெளித்தெரியாது அழகாய் அமைத்த பூ மற்றும் பூஜைப் பொருட்கள், வேகமில்லாத நிதானமான நடை, வாயில் முணுமுணுக்கி ஸ்லோகம் என்று அக்கா மாவே இல்லை. அன்று பார்த்தது போலவே இருக்கிாள். கடவுளே இவளை எப்படி நான் அன்றைக்கு


வரிசை

 

  பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது. சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால் எழுதின குறிப்புகள் என்று நிரப்பிக் கொண்டு கூடப் படித்துக் கொண்டிருந்த சிநேகிதர்களிடம் சொன்னபோது ‘ஏண்டா, நாங்கல்லாம் மட சாம்பிராணிங்க., பாீட்சை நேரத்திலே எங்களுக்கு உடம்பு சாியில்லாம போனா, ஜூரம் வந்தா அதிலே ஒரு நியாயம் இருக்கு. நீதான் நல்லா படிக்கிறவனாச்சே., உனக்கெதுக்குடா இப்போ தலை வலிக்குது ? ‘ என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள்


மூன்றாவது போட்டி

 

  சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள் இருவரைப்பற்றியும் இந்த உலகம் என்னவெல்லாம் பேசுமோ, அதுவெல்லாம் பேசினது – என்னையும் சாந்தகுமாாியையும் பற்றி. கல்லூாியிலும் அம்மா அப்பாவின் கூட்டுக்குள்ளும் ராஜாக்கள் போல வாழ்ந்திருந்துவிட்டு நிஜ உலகத்தினுள் நுழைந்தபோது ஒரு சுழலுக்குள் வந்து சிக்கிக் கொண்டதுபோல அந்த வங்கி அலுவலகம் எங்களுக்கு ஒரு பெரும் மாயமான் வேட்டையாய் பயம்காட்டியது.


தொலைதல்

 

  அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக உறுத்திக்கொண்டிருக்கும் டைாி., இன்றைக்கு திடாரென்று ஏதோ குறைபட்டதுபோல் உணர்வோடு கைவிட்டுப் பார்த்தபோது பாக்கெட்டின் வெறுமை கனமாய்த் தோன்றியது. கடவுளே, அதை எப்படித் தொலைத்தேன். ரொம்ப முக்கியமான டைாி என்று சொல்வதற்கில்லை. டைாியில் பர்ஸனலாய் ஏதும் எழுதுகிற வழக்கம் அவனுக்கு இல்லை., அவ்வளவு சின்ன டைாியில் ஒரு சமயத்தில் சில வார்த்தைகளுக்கு மேல் நுணுக்கி நுணுக்கி