Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: லதா ரகுநாதன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

பேய் அடி

 

  டிவியில் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. வைத்த கண், திறந்த வாய், நீண்ட காது , சாந்தி பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு ஆகிவிட்டபடியால் இது போன்ற பேய் சமாச்சாரங்கள் தூக்கத்துக்கு உதவாது என்று கணேசன் ஒதுங்கிவிட்டான். “ அப்பா பேய் இருக்காப்பா?” தூங்குவது போல பாதிக்கண்களைத் திறந்து நிகழ்ச்சிபார்த்துவிட்டு, அர்ஜெண்டாக பாத்ரூம் போவது போல அம்மாவுக்குப் போக்குகாட்டிவிட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்த கணேசனிடம் வந்தான். ”டேய் நாளைக்கு ஸ்கூல் இருக்கு போய்ப்படு, போ” ”அப்பா பேய் இருக்கா?”


முடிவு எடுத்த அந்த நொடி

 

  காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக. காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் கத்திரி ஆரம்பமாகவில்லை.அதற்குள் என்ன கச கசப்பு. காலையில் கஞ்சி முடமுடப்போடு விறைப்பாக இருந்த புடவை வியர்வையில் நனைந்து சுருங்கி கால் பக்கம் மேலே ஏறி இருந்தது. நூறு தடவைக்கு மேல் யோசித்து விட்டாள். ஆனால் முடிவு எடுக்க முடியவில்லை. டூ வீலர் வாங்கிடலாம்…வேண்டாம்.. யாராவது லேசாக இடித்தால் கூட உயிருக்கு உத்தரவாதமில்லை.


வேதம் புதிது

 

  ” சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?” இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார் தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச்செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு கண்ணாடி, தொப்பி வாயில் பைப் என்ற கெட்டப் வந்து போய்க்கொண்டிருந்ததென்னமோ உண்மை. ”சம்பத்து! அதான் தஞ்சைப்பக்கத்துல ஒரு பழைய கோவில் இருக்கதாமில்ல, அந்த கோவிலும் குளத்தைப்பத்தியும் அடிபடுதே அவ்வளவு!