கதையாசிரியர் தொகுப்பு: லதா ரகுநாதன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…

 

 அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன் ஒரு முறை கட்டாயம் பேசப்பட்டுவிடும். அந்த வீட்டின் நாயகன் – மாமரம். இல்லை, நாயகன் என்பது பிழையோ..பூத்துக்குலுங்கும் அந்த சில மாதங்களில் புதிதாக தாவணி போட்ட பெண் போல இலைகளை சிலிர் சிலிர்த்து பூக்களாக சிரிக்கும். மாமரம் நாயகியோ? எதுவோ, பார்ப்பதற்க்கு கம்பீரமாக ஒரு மதர்ப்போடுதான் அந்த மரம் நிற்கும். சரி, கதைக்கு வருவோம். இதை


உறவுகளின் நிலை

 

 வருஷம் 1980: ”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது” “வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்” ”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது” ”முட்டாள்தனமா பேசாத ராஜி! நாம தானே யோசித்து முடிவு செய்தோம் ? நம் சம்பளத்திற்க்கு ஒரு குழந்தையைத்தான் சமாளிக்க முடியும் என்று…… என்ன, கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்!” ”இல்ல…”. ”இன்னும் ஒன்று யோசி ராஜி! போன குழந்தையைப் பார்த்துக்கொள்ள உங்க அம்மா கூட இருந்தார். ஆனா, இப்போது? தனியாக உன்னால் வேலை, வீடு, பெரியவன், நான்,


கோணங்கள்

 

 ஓரு மணி…….. அடித்தது…கடிகாரத்திலும். , அவள் வயிற்றிலும். வேலை இன்னும் முடியவில்லை. இந்த குரங்கு, அதான் இந்த மேனேஜர் குரங்கு , இதன் பெயர் அன்றாடம் மாற்றப்படும் .அதன் காலை கொனஷ்டைகளே அன்றைக்கான புனைப்பெயரை தீர்மானிக்கும். நிமிடத்தில் சொன்னதை மாற்றி , இதை தப்புச்சொல்லி, அதை அடித்து, இதை திருத்தி,……ஒரு வழியாக, முடிவு செய்த final draft report கொடுத்தபோது ஒன்றடிக்க பத்து நிமிடம் தான் இருந்தது . “சார் , லஞ்ச் போய்ட்டு வந்து தரவா..


குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

 

 நெல்லில் எழுதும் பெயர் நிலைத்திருக்கிறதோ என்னவோ ஆனால் சின்ன வயதில் வைக்கும் பெட் நேம் நிலைத்து விடுகின்றன, சாகிற வரை சுண்டு என்ற சுந்தரவடிவேலு, டக்லூ என்கிற .டக்லஸ், மண்டூ என்கிற மண்டோதரி……. இப்படி நினைவில் ஆணி அடிக்கப்படுகிறது. தி ஹிண்டுவில் வரும் ஆபிச்சுவரி வரை நினைவு வைக்கப்படுகிறது . இதில் விதி விலக்கு பத்மினி. பிறந்த போதே எல்லோரும் மூக்கில் விரல் வைத்தார்கள்.. மூன்று கேஜிதான் வெயிட் என்றாலும் பம்பளிமாஸ் போல நிறைய மாஸ் உடன்


அவன் பார்த்துப்பான்

 

 இன்று சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில் ஒரு கை வண்டியில் அமர்திருந்த அவன் இருப்பு கொள்ளாமல் தவித்தான். ”மூதேவி….. எப்போ வந்து சேருமோ…. பாத்திரம் காலியாகி வெறும் பருக்கை கூட கிடைக்காது போல இருக்கே……சண்டாள மூளி……..கொன்னு போடறேன்”………. எரிச்சலில் கோபம் அதிகம் வந்தது. இரண்டு நாளாக சாப்பிடாதது வயிறு எரிந்தது. வயிற்றை தடவிக்கொடுக்க முடியாமல் கைகள் இரண்டிலும் கட்டு…..கட்டுக்கள் வழியே சீழ் வழிந்தது.