கதையாசிரியர் தொகுப்பு: ரெ.சசிக்குமார்

12 கதைகள் கிடைத்துள்ளன.

மாமனிதர்கள்!

 

 எங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா குமாரு நீயும் காதல் மன்னன்டா யப்பா. எத்தனையோ பேரு அழுதுகினும் கத்திகினும் வந்து பாத்திருக்கேன், ஆனா அவ அழுதது மட்டும் என்னைய இன்னா பண்ணுச்சுனு தெரில. அவ அழுதது எனக்கு


நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

 

 தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது. ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? சொல்லுங்க தாஹிர் பாய். இப்போ நான் ரூம்ல இருக்கேன், நீங்க கம்பெனில இருக்கீங்க. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? மொபைலுக்கு அழைப்பீங்க தாஹிர் பாய். ஹான் சரியாக சொன்னீங்க கிஷோர் பாய். சரி


கானல் மழை!

 

 ஆசையாக அவிழ்த்த பரோட்டா பார்சலின் மத்தியில் உப்பு நீர் துளி துளியாக வடிந்து கொண்டிருக்க, அதை அப்படியே வைத்துவிட்டு கண்களை கசக்கிக் கொண்டே அம்மாவிடம் சென்றான் முரளி. “அவன் என்ன சொன்னான்?” “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அவர் பேச்சே அப்படி தான், அவருக்கு முறையாக பேசத் தெரியாது” தேம்பி தேம்பி அழுதவாரே “அதற்காக அவன் என்ன வேணாலும் பேசுவானா?”. “சரி டா அழாத, போய் சாப்பிடு. இதென்ன எனக்கு புதிதா? பார்த்துக் கொள்ளலாம். நீ போ” “அதெல்லாம் எனக்கு


முத்துவின் உள்ளக் குமுறல்

 

 விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று கோப்பையை நீட்டினாள் தாய் பைரவி. ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு டியூசன் புறப்பட்டான் முத்து. வழக்கம் போல டியூசன் முடித்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனின் உள்ளம்


பரோட்டாவின் மறுபக்கம்

 

 பரோட்டா, பொரட்டா, பரத்தா, புரோட்டா, ப்ரோட்டா இப்படி நீங்க சொல்ற எதுவா இருந்தாலும் அதுவாவே வச்சுக்கோங்க. யாருடா நீ? எங்க இருந்து வந்த? அப்படின்னு அதுட்ட கேட்காதீங்க, நான் சொல்றேன். இது இலங்கைல தொடங்கின ஒரு மாறுபட்ட ப்ரெட் போன்ற ஒரு உணவா தான் நாட்டுக்கு வந்துருக்கு, அப்புறம் மைதாவையே வீசி ஒரு லேயர் மாதிரி வடிவம் குடுத்து அத பரோட்டாவாக்குனது நம்மாளுங்க தாங்க. சிலர் அதெல்லாம் இல்ல கேரளா உணவுனு சண்டைக்கு வராதீங்க. உண்மையான பிறப்பிடம்


திருமதி. கிரேஸி எனும் நான்

 

  தன் அப்பா, அம்மாவினால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தையாய் இருந்த அவளுக்கு அந்த இடத்தில் கிடைத்த ஒரே நிம்மதி, “ஒரு தாய் பூனையும் அதன் ஆறு குட்டிகளுமே”. அந்த தாய் பூனை வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே மஞ்சள் தெளிக்கப்பட்டாற் போல வனப்பான தேகமுடையது. அதன் குட்டிகளில் மூன்று அதைப் போலவும், மற்றவை கருப்பு மற்றும் வெள்ளை கலந்தாற் போல கண்கவர் வண்ணத்திலும் காணப்பட்டது. ஒருவேளை இந்த மூன்று குட்டிகள் அப்பாவின் சாயலாக கூட இருக்கலாம், ஆனால்


இளமையான கனவுகள்!

 

 கனவுகள் கதைகள் போலவே, குடும்பமாகவும் வரலாம், ஆன்மீகமாகவும் வரலாம், அமானுஷ்யமாகவும் வரலாம், ஆக்சன் மட்டும் திரில்லராகக் கூட வரலாம். எது எப்படி இருப்பினும், எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் நமக்கு நரைத்தால் கூட சில கனவுகள் இன்றும் இளமையாக நம்மை விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சில கனவுகளில் கரையலாம். சிறுவயதில் இருந்தே சற்று இறுக்கமான சூழலில் அதிக கனவுகள் வரும். பொதுவாகவே நம் மனது எதையாவது ஆழ்ந்த சிந்தனையில் யோசித்துக் கொண்டே தூங்கினால் நிச்சயம் அன்று


முன்பதிவற்ற இரயில் பயணங்கள்

 

 சிறுவயதிலிருந்தே பேருந்து மற்றும் மகிழுந்துகளில் செல்வதென்றால் வாந்தி வருவது வழக்கம், அது நெடும்பயணமானலும் சரி குறும்பயணமானலும் சரி. எனது அன்னைக்கும் ஒவ்வாமை இருந்தால் என்னவோ எனக்கும் அதே ஒவ்வாமை இருந்தது. இராமநாதபுரத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கும் முன்னரே பாலித்தீன் பைகளை நான்கைந்து வாங்கி பைக்குள் வைத்துக்கொள்வது வழக்கம். செல்லுமிடமெல்லாம் இதனாலேயே தந்தையிடம் திட்டு வாங்குவதுண்டு. காலப்போக்கில் அந்த ஒவ்வாமை அறவே மறந்தது. இப்பொழுது எங்கு சென்றாலும் எவ்வளவு தூரம் சென்றாலும் எனக்கும் என் தாய்க்கும் அந்த பிரச்சினை வருவதில்லை


அன்புள்ள அமானுஷ்யம்

 

 இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும் கோபத்தைக் காட்டி கூட நான் பார்த்ததில்லை. அவங்க அம்மா ஒரு பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். கடைக்கு வரும் அனைவரிடமும் சாயா அக்கா இன்முகத்தோடு நலம் விசாரிப்பாங்க, பார்க்கவும் அழகான தோற்றம் கொண்டவங்க. நான் சிறுவயதில் ஜவ்வு மிட்டாய், கல்கொனா, கொக்கோச்சி, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், அலாவுதீன் மிட்டாய் மற்றும் பன்னீர் சோடா


மாணவியரா? மாதரா?

 

 சக்தி மற்றும் லோகா 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரே பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரே தெருவில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள். ஹே லோகா எப்படியும் இந்த வருடம் பள்ளி ஆரம்பிக்காது போலடி நமக்கு ஜாலி தான் என்றால் சக்தி. என்னடி ஜாலி, வீட்டுல இருந்து என்ன பண்ண போறோம்? அதுக்கு ஸ்கூல் போனாலும் கொஞ்சம் பொழுது போகும். உடனே சக்தி, ஸ்கூல் போனா பொழுது மட்டுமா போகும்? படிக்கணும், வீட்டுப் பாடம் செய்யனும், ரெகார்ட் எழுதனும், அதெல்லாம்