கதையாசிரியர் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு

19 கதைகள் கிடைத்துள்ளன.

காதலினால் அல்ல!

 

 காதல் என்பது உன்னதமான பொருள். காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது — அதாவது


நல்லவராவதும் தீயவராவதும்

 

 ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட உழைத்ததில் வீட்டில் சமைக்க முடியவில்லை. பிள்ளைகள் ரொட்டியும் கடையில் வாங்கிய குழம்புமாக கிடைத்ததைத் தின்றுவிட்டுப் பள்ளிக்கூடம் போவதைத் தொழிற்சாலையில் இருந்த நேரத்திலெல்லாம் நினைத்துக் கவலைப் படுவாள் பார்வதி. இன்றையிலிருந்து ஒரு வாரத்துக்கு மத்தியான ஷி·ப்ட்.


நாளைக்கு

 

 கடித உறையைப் பார்த்ததுமே ராஜேஸ்வரிக்கு மனசுக்குள் கிலி பிடித்துவிட்டது. “அரசாங்கச் சேவையில்” என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பழுப்பு உறை. எங்கிருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. யார் எழுதியிருப்பார்கள் என்று புரிந்தது. ஓரத்தைக் கிழித்துப் படித்தாள். பத்மாதான் எழுதியிருந்தாள். தமிழில் சுருக்கமாக எழுதியிருந்தாள். இது படிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடிதம் என்று காட்ட இளங்குற்றவாளிகள் நிலையத்தின் அரசாங்க முத்திரையும் இருந்தது. “அன்புள்ள அக்காவுக்கு, வணக்கம். இங்கு சுகம். உங்கள் சுகம் அறிய ஆவல். நிற்க, அடுத்த மாதக் கடைசியில் என்னை


ஒட்டுப்புல்

 

 அந்தப் பள்ளிக் கூடத்தில் வேறு என்ன இல்லாவிட்டாலும் அந்தக் காலை வேளையில் கலகலவென்று சத்தம் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கே உரிய கதம்பமான ஒலிகள். கான்வாஸ் சப்பாத்துகள் தரையில் எழுப்பும் தட் தட் ஓசை; நாற்காலிகள் இழுக்கப்படும் ஒலிகள்; கரும்பலகையில் சாக்பீஸ் கிறீச்சிடும் ஒலி; “வணக்கம் டீச்சர்” என்ற ஒரு கோரஸ்; “யார் கரும்பலகையில இப்படி கிறுக்கினது?” என்ற ஓர் ஆசிரியரின் கர்ஜனை. தலைமை ஆசிரியர் நடேசனுக்குப் பக்கமாக அன்பரசன் ஆறாம் வகுப்பு அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது இந்த


இன்னொரு தடவை

 

 இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். காலிப் பாக்கெட் சாலையில் விழுந்தது. லைட்டரைத் தேடினான். எந்தப் போக்கெட்டில்? கோட்டுப் போக்கெட்? சிலுவார் போக்கெட்? தட்டித் தட்டித் தேடினான். சிலுவாரின் பின்புறம்? கோட்டுக்குள் கைவிட்டு சட்டைப் பையைத் துழாவினான்.