கதையாசிரியர் தொகுப்பு: ருக்மிணி பார்த்தசாரதி

1 கதை கிடைத்துள்ளன.

கோகிலா நைட்டிங்கேல்

 

  சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது. நேற்று மாலை கோகிலாவை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்களே! ஏதாவது நற்செய்தி இருக்குமோ? விசாரித்துப் பார்க்கலாமே! இரண்டு வீடுகளுக்குமிடையே ஒரு தாழ்வான சுவர். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நின்றுகொண்டால் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம். கமலம் சுவரருகே வந்து நின்றுகொண்டாள்… அவளைக் கண்டதும் கோகிலா தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டுத் தானும் சுவரருகே வந்தாள்.