கதையாசிரியர் தொகுப்பு: ரா.ராஜசேகர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் பெண்ணல்ல!

 

  வடபழனியில் உள்ள பிரபல திரையரங்குக்கு நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருந்தேன். திகில் படம். இருந்தாலும் முதல் பாதிவரை சிரிப்பாகத்தான் போச்சு. இடைவேளையில் நண்பன் பத்ரனுடன் காபி அருந்திக் கொண்டிருந்தேன். “”என்னடா பத்ரா திகில் படம்னே.. சிரிப்புப் படமாக இருக்கே?” “”இல்ல நண்பா செகண்ட் ஆஃப் பூரா திரில்லிங்காத்தான் இருக்கும்..” என்றவன் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தான். நான் வேண்டாம் என தடுத்தும் படத்தின் சஸ்பென்ûஸ உடைத்துவிட்டான். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. “”டேய் நான் ரூமுக்குப் போறேன்..”


எல்லாமே ஸ்டண்ட்தான்!

 

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின் சடலம். பேழையின் மேல் குவியல் குவியலாக மலர் மாலைகள். தற்போது வசூல் வேட்டையில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் உன்னத நடிகரின் படத்தில் நடித்தவர் ராஜபாண்டி. ஒரு மாதத்துக்கு முன் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது உன்னத நடிகருக்கு “டூப்’ ஆக நடிக்கும் போது தலையில் பலத்த அடிபட்டு கோமாவில் விழுந்து… படம் “ஓகோ’வென்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று


எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

 

  அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தனது திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். முதலில் பல் துலக்கச் சென்றார். ஃப்ளோரைடு நுரை கொப்பளிக்கும் பற்பசையைப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து சமையல் உப்பைக் கொஞ்சம் பொடி செய்து பல் துலக்கினார். இதுதான் பல்லுக்கும் ஈறுக்கும் நல்லதாம். அடுத்ததாக தண்ணீர் குடிக்கச் சென்றார். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர் தண்ணீர் குடிப்பது