கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்
மாலதி
அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஏசி கேன்டீனில் அப்போதைக்கு ஜாஸ்தி கூட்டம் இல்லைதான். கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், புல் தரையினூடே அமைந்த நடைபாதையில் தங்கள் ஆக்ஸஸ் கார்டுகளைத் தேய்த்தபடி போய் வந்து கொண்டிருந்த என்ஜினியர்களைப் வெறுமையாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். உண்மையில் அது அவன் வேலை செய்யும் அலுவலகம் அல்ல. அவன் வேறு நிறுவனத்தைச் சார்ந்தவன். நண்பனைப் பார்க்க கொடுக்க கெஸ்ட் பாஸ் போட்டு வந்தவன் பதட்டமாய் அப்படி அமர்ந்திருந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தது. அவன் வந்து
படுக்கையறைக்கொலை
பங்களூர் கோரமங்களாவில் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணக்கார முதலைகளுக்கான தடபுடல் விருந்து மெதுவாக முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த எல்லா தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர். மூன்றே மூன்று பெண்களைத்தவிர மற்ற அனைவரும் ஆண்கள். முடியும் தருவாயில் அந்த மூன்று பெண் அங்கத்தினர் சென்ற பிறகு மேடையேறிய நவனாகரீக உடை அணிந்த ஒருவன் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கலாச்சார மையத்தை பற்றி எடுத்துச் சொல்லத்தொடங்கியிருந்தான். அவன் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த எல்லாரையும் போல் விழிகள் விரிந்தது
தண்டனை
ஒரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? எதிரியை மூர்க்கமாய்த் தாக்க வேண்டி, உள்ளங்கைகள் இறுக்கிப் பிடித்த உருட்டுக்கட்டையைச் சுற்றி தசை நார்கள் இருகி கட்டையின் தின்மையை எதிர்க்கும் நிலையில் அவன் எண்ண ஓட்டங்கள் எப்படி
எந்திரன்
இங்கிலாந்தில் எடின்பர்க்கின் பிரின்ஸஸ் தெரு எப்போதும் போல் ஜன நடமாட்டத்துடன் காணப்பட்டது. வெவர்லி ரயில் நிலையத்திற்கு எதிராக அமைந்த மெக்டொனால்ட் உணவகத்தின் உள்ளே எப்போதும் போல் வெள்ளைக்காரர்களும், வேலை செய்ய வந்த இந்தியர்களும், இலங்கை தமிழர்களும், சில பாக்கிஸ்தானியர்களும் நிரம்பியிருந்தனர். ‘கார்த்தி, சம்படி ஹஸ் கம் டு சீ யு’ வெள்ளைக்கார வாடிக்கையாளர் ஒருவருக்கு பர்கர் எடுத்துச்சென்றபடியே அந்த மெக்டோனல்ட் உணவகத்தின் ஓரத்தை பார்வையால் காட்டி சொல்லிவிட்டுச் சென்றான் மாறன். கார்த்தி எக்கிப் பார்த்தான். இரண்டு
பரிச்சயக்கோணங்கள்
‘இத ஏன் நீ என்கிட்ட முதல்லயே சொல்லல?’. ‘அதுக்கு சான்ஸே இதுவரைக்கும் வரல, சந்த்ரு’. ‘புவனா, நாம ரெண்டு வருஷமா லவ் பண்றோம். இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவ கூடவா அதுக்கு சான்ஸ் வரல? பழக ஆரம்பிச்சப்போ சொல்லிருக்கலாமே’. ‘ப்ச், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீ யாரோ, நான் யாரோ. அப்போதான் பாத்திருந்தோம். பழக ஆரம்பிச்சிருந்தோம். பர்சனலான விஷயத்தை, அதிகம் பழக்கம் இல்லாம உன்கிட்ட எப்படி சொல்றதுனு சொல்லலடா’. ‘சரி, அதுக்கப்புறம் சொல்லியிருக்கலாம்ல’. ‘