கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்

31 கதைகள் கிடைத்துள்ளன.

படுக்கையறைக் கொலை

 

  ‘என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றென்னு பாரு’ மனதிற்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில். சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக்கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே


மோதிக்கொள்ளும் காய்கள்

 

  ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி க்ருப்யா க்யான் தே…’ காதைக் கிழித்துவிடும் நோக்கில், சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் அப்பிக்கிடந்த சலசலப்பையும், பரபரப்பையும் தாண்டி கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண், ரயில் நிலைய ஒலிப்பெருக்கியில். கடைசி நிமிடத்தில் வந்து ரயில் கிளம்புவதற்குள் தங்கள் பெட்டிகளில் ஏறிவிட அவசர அவசரமாய் ராகவனைக் கடந்து


திரியும் உண்மைகள்

 

  ‘ம‌ஞ்சு, பூர்ணிமாவ‌ நான் ல‌வ் ப‌ண்றேன்’. ‘நினைச்சேன், பணம் வாங்காம‌‌ ரிப்பேர் ப‌ண்ற‌ப்போவே நினைச்சேன்’. மெலிதாக‌ வெட்க‌ப் புன்ன‌கை பூத்த‌ கதிர் தொட‌ர்ந்தான். ‘ஆனா என‌க்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு’. ‘அட‌ப்பாவி, ல‌வ் ப‌ண்ண ஆர‌ம்பிச்ச‌துமே ச‌ந்தேக‌மா உன‌க்கு’. ‘இல்ல‌, அவ‌ ஸ்கூட்டி ரிப்பேர் ஆற‌தும், என்கிட்ட‌யே எடுத்துட்டு வ‌ர‌தும், ரிப்பேர் ப‌ண்ற‌ வ‌ரைக்கும் என் கிட்ட‌யே பேசுற‌தும், வீட்ல‌ ச‌மைச்ச‌த‌ என்கிட்ட‌ குடுக்குற‌தும், நாளு, கிழமைன்னா வீட்டுக்குக் கூப்பிடுறதும் எல்லாமே, நான் ஆச‌ப்ப‌ட்ற‌ மாதிரியே


மனிதர்கள் குருடு செவிடு

 

  மூன்றாம் வருட பயிற்சி வகுப்பை விட்டு வெளியே வருகையில் கல்லூரி முழுவதும் என் கண்கள் அலைபாய்ந்திருந்தன அவளைத் தேடி. ரீனா வழக்கமாக கல்லூரி மைதானத்தை ஒட்டிய பார்க்கில் அவளின் தோழிகளுடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அவளை அங்கு எதிர்பார்த்து நானும் அங்கு சென்றேன். மணி மாலை ஐந்தைக் கடந்திருந்தது. கல்லூரி வகுப்பறைகள் பெரும்பாலும் காலியாக இருந்தன. வெறுமையான வகுப்பறைகள் ஏனோ திகிலாய் இருந்தது பார்ப்பதற்கு. பழக்கப்பட்ட இடங்கள், அதன் வழக்கத்தில் இல்லாமல் இருந்தாலே ஏதோ அமானுஷ்யமாய்த்


நீ விரும்பும் தூரத்தில்

 

  வானம் மப்பும் மந்தாரமுமாய் காட்சியளித்தது. மாலை சாய்ந்திருந்த வேளை, நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் புஷ்பம் காலனி பெரியவர்கள், மழை வரப்போவதாய் குறிப்பறிந்து தத்தம் வீடுகளின் முன்பாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டிற்குள் விரட்டிக்கொண்டிருந்தனர். விளையாட இடம் கிடைத்த தோரணையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கூதற்காற்றின் மத்தியில், அனிச்சையாய், பழக்கப்பட்ட வழியில் தானே நகரும் கால்களுக்கு உடலைத் தந்துவிட்டு, எங்கோ எதிலோ தொலைத்துவிட்ட நினைவுகளைத் தேடக் கூடத் திராணியின்றி சோர்வாய்க் காலனித் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தான் நந்தா. மெல்ல