கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்

31 கதைகள் கிடைத்துள்ளன.

திசைகள் மாறிவிடுமோ?

 

  வீட்டு வாசலில் அம்மா ஆசை ஆசையாய் வளர்த்த பட்டு ரோஜா, செம்பருத்தி, கனகாம்பரம், குரோட்டன்ஸ் முதலான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்த தோட்டத்தினூடே வேயப்பட்ட நடைபாதையில் நின்றபடி ஆக்ஸஸ் கார்டு, அலைபேசி, வாலட் எனப்படும் பணப்பை முதலானவைகளை எடுத்துக் கொண்டோமா என்று மீண்டும் ஒரு முறை அவதானிக்கையில் தான் கவனித்தேன். அலைபேசி மின்சார‌ தாகம் கொண்டிருந்ததை. சார்ஜரை அலுவலகத்திலேயே முன்தினம் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அலுவலகம் செல்லும் வரை பெரிதாக அழைப்புகள் இருக்காது என்பதால், அப்பா


மாலதியின் புத்திசாலித்தனம்

 

  அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஏசி கேன்டீனில் அப்போதைக்கு ஜாஸ்தி கூட்டம் இல்லைதான். கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், புல் தரையினூடே அமைந்த நடைபாதையில் தங்கள் ஆக்ஸஸ் கார்டுகளைத் தேய்த்தபடி போய் வந்து கொண்டிருந்த என்ஜினியர்களைப் வெறுமையாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். உண்மையில் அது அவன் வேலை செய்யும் அலுவலகம் அல்ல. அவன் வேறு நிறுவனத்தைச் சார்ந்தவன். நண்பனைப் பார்க்க‌ கொடுக்க கெஸ்ட் பாஸ் போட்டு வந்தவன் பதட்டமாய் அப்படி அமர்ந்திருந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தது. அவன் வந்து


தூக்கமில்லா இரவுகள்

 

  ஃபுட்போர்டில் தொங்கியபடி பயணித்த பஸ்ஸிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் கல்லூரி வளாகத்தைக் கடந்து, இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் லாப்பை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரவியின் நடையில் அப்பட்டமாய் ஒரு அவசரம் இன்னமும் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அப்படிப் போகக் காரணங்கள் இல்லாமலில்லை. அவனுக்கொரு தங்கை இருக்கிறாள். ஒரே தங்கை. பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். அவள் மேல் ரவிக்கு கொள்ளை அன்பு, பாசம். அவளின் கல்லூரிக்கு சொந்தமாக கல்லூரி பஸ் இல்லை. தினம் சென்னை மாநகர‌ பல்லவனுக்கு


கற்றது தமிழ்…

 

  அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான்.இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற செய்தி தான் அதற்கு காரணம். மாலதி பி.ஏ படிக்கிறாள். அதுவும் தமிழில். முருகனிடம் சீனியர் என்கிற முறையில் பேச ஆரம்பித்தது. மாலதி, முருகனின் தமிழ் கவிதைகளின் விசிறி. அப்படியே ஏற்பட்ட நட்பு, முருகனின் மனதில் காதலை விதைத்திருக்கிறது. தன் காதலை போய்


படுக்கையறைக் கொலை

 

  பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப் பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக் கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்படி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. இந்த வீடும் அந்த சொத்தில் அடக்கம்.. வீட்டில் யாரும் இல்லை. யாரும் வருவதற்குள் காரியத்தை முடிக்கவேண்டும். இதோ, இந்த ஸ்க்ரூவைத் தளர்த்தி,