கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்

31 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புள்ள அக்கா தங்கைகளுக்கு…!

 

  நேற்று மாலையிலிருந்து ஜானகிக்கு நேரம் சரியிருக்கவில்லை. அவள் அண்ணன் தாமோதரன் அவளை கூண்டில் நிற்க வைத்து விட்டு அவள் அம்மாவை கேள்விகளால் துளைக்காத‌ குறைதான். அவன் “பெரிய இவளுன்னு நினைப்பா இவளுக்கு? காலேஜுக்குப் போற பொண்ணுக்கு இதெல்லாம் எதுக்கு? படிக்க போறாளா? இல்ல ஃபாஷன் ஷோவுக்கு போறாளா? இதெல்லாம் நீங்க கேக்கமாட்டீங்களா? …” என்று பொறிந்து தள்ளினான். அவன் குரலில் உஷ்ணம் அதிகமாயிருந்தது. “அம்மா எதுக்கு கேக்கணும்? அம்மாக்கு ஜீன்ஸ் போடுற‌ வ‌ய‌சா?…”ஜான‌கியும் விடவில்லை. வேண்டுமென்றே


அவள் கதையை முடித்து விட்டால்…!

 

  பெட்ரூமில் தொங்கிக் கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப் பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக் கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டு ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்ப‌டி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிப‌தி. இந்த‌ வீடும் அந்த‌ சொத்தில் அட‌க்க‌ம். வீட்டில் யாரும் இல்லை. யாரும் வ‌ருவ‌த‌ற்குள் காரிய‌த்தை முடிக்க‌ வேண்டும். இதோ, இந்த‌


தமிழுக்கு வேலை கிடைக்குமா?

 

  அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான். இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த‌ தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற செய்தி தான் அதற்கு காரணம். மாலதி பி.ஏ படிக்கிறாள். அதுவும் தமிழில். முருகனிடம் சீனியர் என்கிற முறையில் பேச ஆரம்பித்தது. மாலதி, முருகனின் தமிழ் கவிதைகளின் விசிறி. அப்படி ஏற்பட்ட நட்பு, முருகனின் மனதில் காதலை விதைத்திருக்கிறது. தன் காதலைப்


நண்பன் வீட்டில் என் மனைவி?

 

  வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்… ஜெய‌ந்த் மூர்த்தியின் ந‌ண்ப‌ன். இன்னும்


பச்சை ரிப்பன் பார்சல்

 

  ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக் கொண்டிருந்தது மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக் கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தளர்ந்திருந்த மனநிலையுடன் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராமச்சந்திரன்தான். ராமச்சந்திரன், மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச் செல்லவில்லை. முதல்