கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்

31 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்

 

  ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா. இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து,


போலீஸ் வந்துவிட்டால்…

 

  கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை. ஆனால், அவளின் அங்கங்களை எடுத்துக்காட்டும் உடையில் அவளின் உடல் மின்னியது. சில மணித்துளிகளே. வெப்காம் திரை இருளடைந்தது. சரியாக ஒரு நொடி இடைவெளிக்குப்பின் மைக் மீண்டும் உயிர் பெற்றது. அவள் தான். ‘ஐ எக்ஸ்பெக்ட் எ பிக் செக் படி. டுவென்டி


நடுக்கடலில்…

 

  ‘வேற வழியில்லபா. ஒரு தபா யோசிச்சிக்க. அப்பால சொல்லு தனா’ என்றபடியே காதோரம் செருகியிருந்த பீடியை எடுத்து வாயில் வைத்து, இடுப்பு வேட்டிக்கிடையில் திணித்திருந்த சின்ன தீப்பெட்டியை இடதுகை ஆள்காட்டி விரலால் நெம்பி எடுத்து ஒரு தீக்குச்சியை லாவகமாய் இரு உள்ளங்கைகளைக் குவித்து உரசி எரியவிட்டு, வாயிலிருந்த பீடியை பற்ற வைத்தான் சலீம். தனாவும் சலீமும் தனித்திருந்த அந்த மீனவர் குடியிருப்புக் கடலோரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. க‌ட‌லோர‌க் காற்று இருவ‌ரின் காதுக‌ளில்


இரண்டாவது முகம்

 

  ‘ஹேய் காஞ்சனா, வில் மீட் யூ அட் த சேம் ப்லேஸ் அட் காலேஜ். லெட்ஸ் ஸீ ஹூ பிக்ஸ் த ரோஸ் ஃபர்ஸ்ட்… -ராகவி’. ராகவி, இதழ்களில் தவறவிட்ட மெலிதான புன்னகையுடன், அந்த வாசகங்களை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு என்டர் தட்டினாள். கணிணி விரைந்து அவளின் கடிதத்தை ஒரு உரையில் போட்டு மூடி, காஞ்சனாவிற்கு அனுப்பியது. காஞ்சனா ராகவியின் தோழி. இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். அது


கதை கதையாம் காரணமாம்!

 

  உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடப்பதில்லை. சில நேரங்களில், இந்த காரணங்களும் அவற்றால் விளையும் நிகழ்வுகளும் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும் பெயரிடப்படாத இன்னும் பல மன உணர்வுகளையும் உருவாக்குகின்றன. அதன் போக்கில் தான் மனிதன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படியொரு ஆச்சரியம் தான் ராகவன் வலையில் மாலதி விழுந்ததும். ராகவன், இளம்வயதிலேயே சிகரெட், டாஸ்மாக் வகைகள் எனக் கெட்டுச் சீரழிந்து, ஏரியாவின் எல்லா பெண்களுக்கும் ரூட் விட்டு, அத்தனை பேரும் போலீஸ் ஸ்டேஷனில் அவனுக்கு வாழ்த்துப்பா பாடி,