கதையாசிரியர் தொகுப்பு: ராம்ப்ரசாத்

31 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் சாமான்யள் அல்ல

 

  அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. இப்படித் தோன்றிய நொடிகளில் பசித்த வயிறால் தூக்கம் கலைந்திருந்தது எனக்கு. அந்த விடிகாலையில், சுற்றிலும் தூவப்பட்டு பரவிக்கிடந்த மெளனத்தினூடே, உத்தரத்தில் தொங்கும் மின்விசிறியின் உடலை வெறித்துப் பார்த்தபடி கிடந்திருந்தேன் நான். இப்ப‌டி நான் க‌ண்விழிப்ப‌து ஒன்றும் புதித‌ல்ல‌ தான். ஆனால் வழக்கமாக என் நினைவில் அந்த நாள் வரை வந்திராத அவ‌ளிட‌ம் நான் சொன்ன‌ அந்த‌ வார்த்தைகள் அன்று நினைவில் தங்காத ஏதோ ஒரு க‌ன‌வின் முற்றுப்புள்ளியிலிருந்து தொட‌ர்பே இன்றி


விநோதன்

 

  அவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில்


தவறிவிடும் சந்தர்ப்பங்கள்

 

  ஃபுட்போர்டில் தொங்கியபடி பயணித்த பஸ்ஸிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் கல்லூரி வளாகத்தைக் கடந்து இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் லாப்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ரவியின் நடையில் அப்பட்டமாய் ஒரு அவசரம் இன்னமும் தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அப்படிப் போகக் காரணங்கள் இல்லாமலில்லை. அவனுக்கொரு தங்கை இருக்கிறாள். ஒரே தங்கை. பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். அவள் மேல் ரவிக்கு கொள்ளை அன்பு, பாசம். அவளின் கல்லூரிக்கு சொந்தமாக கல்லூரி பஸ் இல்லை. தினம் சென்னை மாநகர‌ பல்லவனுக்கு காத்திருந்து கூட்டத்தில்


இருத்தல் தொலைத்த‌ வார்த்தைகள்…

 

  சில நேரங்களில், மெளனம் ஒரு பெரிய ஆயுதம். சொல்லாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் மிக அதிகம். இருத்தல் தொலைத்த வார்த்தைகள் மிக மிக சுதந்திரமானது. அப்படிச் சில வார்த்தைகள், தம் இருத்தலை தொலைத்திருந்தன அந்த மாயாஜால் உணவுவிடுதி மேஜையில். தொலைக்காத வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தனர் அந்த‌ இருவரும். ‘இப்ப என்னதான் சொல்ற’ மெளனம் கலைத்து சீறினான் கார்த்திக். ‘ரமேஷ் உனக்கு முன்னாடியே எனக்கு ஃப்ரண்ட். அவன் ஃப்ரண்ட்ஷிப்ப உனக்காக என்னால விட முடியாது’. பதிலுக்கு பாய்ந்தாள் ஜினிதா ‘அப்போ


பொறுப்பு

 

  வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள். “ஹாய், ரவி” “ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி