கதையாசிரியர் தொகுப்பு: ராம்பிரசாத்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அதிர்ஷ்டம்

 

  என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆதலால் அலுவலகத்தில் அன்றாட வேலைகள் முடிந்துவிட்டால் செய்வதற்கு பெரியதாக ஏதுமில்லாத காலகட்டம் அது. அப்போதுதான் அந்த ஜெர்மன் காரை வாங்கியிருந்தேன். பெயர் வொல்க்ஸ்வேகன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த காரில் சொகுசாக அமர்ந்தபடி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விதமான


யானை யானையாகும் தருணம்

 

  நாங்கள் ஒரு வரிசையில் சுமார் நூற்றி அறுபது பேர் காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் நூற்றி அறுபது பேர்? ஒரு கணக்கின் பிரகாரம் நூற்றி அறுபதுக்கும் மேல் மனிதர்கள் மனிதர்கள் ஓரிடத்தில் குழுமினால், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குழு இரண்டாக உடைந்துவிடும். ஆக நாங்கள் மனிதர்கள் நூற்றி அறுபது பேர்களாக குழு குழுவாகப் பிரிந்து கிடைத்த காடுகளுக்கெல்லாம் ஊடுறுவிக்கொண்டிருக்கிறோம். நகரங்கள் இனி அர்த்தப்படப்போவதில்லை. நகரங்களுக்கென , நாகரீகங்களுக்கென ஒரு அர்த்தமிருந்தது. அது இனி பிழைப்புக்குத் தேவைப்படப்போவதில்லை.


கண்காட்சி

 

  ‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வேண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின்


சுற்றுலா

 

  நான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது. பிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம்