கதையாசிரியர் தொகுப்பு: ராமராஜன் மாணிக்கவேல்

5 கதைகள் கிடைத்துள்ளன.

விழியின் விதைகள்

 

  கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து பாடினாள். காற்று அங்கு நின்று ரசிக்க தொடங்கியதில், இசை தேன்சாரல் அங்கு வீசிக்கொண்டு இருந்தது. வெளியே பாடகியாய், உள்ளே ரசிகையாய் இருபெரும் உள்ளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த மைதிலி கூட்டத்தை கவனிக்கவில்லை. பாட்டால் அவளும், அவளால் பாடலும் மலர்ந்ததில், அந்த கல்லூரி அரங்கம் இசைச்சோலையாகி பார்வையாளர்களை வண்டுகளாக்கியது. வானத்தில் இருந்து இறங்கும் கண்ணுக்கு தெரியாத இசை


சிந்தாத முத்தங்கள்

 

  கால்வட்டமாய் கழுத்தை இடதுதோள் பக்கம் திருப்பி இடது கண்ணால் பார்த்தான் முருகன். ‘அவளா? ; கண்கள் பேச, மனம் பார்த்தது. ‘அவளேதான்!’ மனம் சொல்ல, கண்கள் தொட்டுப்பார்த்தது. அவசரமாய் அரைவட்டம் அடித்து கழுத்து தானாகவே வலதுதோள் பக்கம் திரும்பியது. யாரை மறப்பதற்காக சொந்தம், பந்தம,; உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் மறந்து ஒரு அனாதையாக இன்று நிற்கிறானோ அவளே அருகில் நின்றால், காலுக்கு கீழே பூமி ஆடாமல் நிற்குமா? பூமி ஆடிக்கொண்டுதான் இருந்தது முருகன் விழாமல்


நீர்க்குமிழி

 

  பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான் அப்படிக்கேட்டேன். அது தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து. சிலநேரங்களில் பி.முட்லூரில் அந்த வகைப்பேருந்துகள் நிற்பது உண்டு. நடத்துனர் கடலூர் பாண்டி சென்னை என்றபடியே என்னைப்பார்த்து நிற்கும் என்பதற்கு சம்மதமாக தலையையாட்டினார். எனக்கு மகிழ்ச்சி. சீக்கிரமாக சென்றுவிடலாம். சீக்கிரமாக செல்வதில் என்ன மகிழ்ச்சி?. நான் சென்றபின்பு அங்கு மகிழ்ச்சி இருக்குமா?


அறக்கிளி

 

  நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை ஒன்றை பிடித்தப்படி மூவளைவு கொண்டு நின்றான் சரவணன். தேன் வண்ணக்கனியும், மஞ்சல் வண்ண செங்காய்களும் நிறைந்த பேரிச்சைக்குலைகளோடு பாலையில் முலைத்த தேர்போல் நின்றது அந்த வெயிலுக்கு மறத்துபோன மரம். ஈச்சயிலையின் நிழல் அவனின் வெள்ளை டி-சர்ட்டில் விழுந்து புதிய வடிவங்களை கணம்தோறும் வரைந்து அழித்துக்கொண்டு இருந்து. பாலைமண்ணில் வேட்டைநாய்போல அலையும் வெயில் மின்துகள்கள் வழிவதுபோல


கற்கனிமர வீதி

 

  திலகவதி பாட்டிம்மா தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும் “யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு போயிருக்காள். செண்டு வாசம் மல்லிகைப்பூவாசமும் மூக்கை துளைக்குது” என்று கூறிய படி கணவன் பாலசுப்பிரமணியன் தாத்தாவைப் அண்ணாந்துப் பார்த்து சிரித்தது. கீழே சிந்தி கிடந்த மல்லிகைப்பூவைப் பார்த்த தாத்தா பாட்டியின் நுனிமூக்கு புடைக்கும் அழகை கனிந்து நோக்கி ஏதோ சொல்லவந்தவர் பாட்டியம்மாவின் வைரமூக்குத்தி ஜொளிப்பதை கண்டு களித்தார். பாட்டிம்மாவின் மஞ்சல்பூசிய நெற்றியில் வைத்திருந்த காசளவு