கதையாசிரியர் தொகுப்பு: ராணி பாலகிருஷ்ணன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா என்ற ஆகாசம்

 

 காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது.அவள் அருகில் ஏழு வயது தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள். முன் சீட்டில் டிரைவர் மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான். அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து கொண்டாள். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி கார் புறப்பட்டது. சென்னையில் வடபழனியில் அனுராதாவின் பிறந்த வீடு. அனுராதாவின் அப்பா ராஜாமணி


கிராதார்ஜுனீயம்

 

 பாகம் நான்கு | பாகம் ஐந்து ஒரே சமயத்தில் சிவனுடைய , அர்ஜுனனுடைய இருவரின் பாணங்களும் காட்டுப் பன்றியின் மீது தைத்தன. வேடன் உருவில் உள்ள சிவ பெருமான், ஒரு காட்டுவாசியை அர்ஜுனனிடம் அனுப்பி வைத்தார். அவன் அர்ஜுனன் சமீபம் வந்து போற்றி வணங்கி கூறுகிறான், “ஐயா, நீங்கள் அரசர்களில் சிறந்தவர் என்று நினைக்கிறேன். அதனால் எனது வணக்கங்களை உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த காட்டுப் பன்றியின் மீது பதிந்துள்ள பாணம் எங்கள் எஜமானருடையது. மஹாபுருஷரே, சிவனுடைய


கிராதார்ஜுனீயம்

 

 பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து இந்திரியங்களை வென்று தவம் செய்யும் அர்ஜுனனை அப்ஸரஸ் பெண்களால் வசீகரம் செய்ய இயலவில்லை. இந்திரனிடம் சென்று இந்த முயற்சியில் தாங்கள் தோல்வி அடைந்ததாக கூறினர். இச்செய்தியைக் கேட்ட இந்திரன் அளவில்லா ஆனந்தம் அடைந்தான். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அர்ஜுனனை சோதனை செய்து பார்க்க விரும்பினான். அதனால் ஒரு முனிவரைப் போன்று வேஷமிட்டு தபோவனத்திற்கு சென்றான். முனிவரைக் கண்ட அர்ஜுனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகள் பல


கிராதார்ஜுனீயம்

 

 பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு யக்ஷனின் உதவியுடன் அர்ஜுனன் இந்திரகீல பர்வதத்தில் தவம் செய்வதற்காக வந்து அடைந்தான். வாடைக் காலம் நெருங்கியது. பூமிதேவி தான்யங்களைப் பரிபூரணமாக வர்ஷித்துக் கொண்டிருந்தாள். குளங்கள் நதிகள் போன்ற நீர்நிலைகள் சுத்தமாக தெளிவாக இருந்தன. ஆகாயத்தில் பறவைகள் கிரீச்சிட்டப்படி இனியகானம் பாடின. மென்மையாக மலைய மாருதம் சுகமாக வீசின. எல்லா திசைகளும் காண்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படி மிக வளமையாக , செழிப்பாக இருந்தன. இந்திரகீலபர்வதத்தை அடைந்த


கிராதார்ஜுனீயம்

 

 முதல் பாகம் | பாகம் இரண்டு முனிவர்களுக்குத்தான் சாந்தம் மிக அவசியம். அரசர்களுக்கு சாந்தம், பொறுமை அவசியமல்ல. அதனால் சத்ருக்கள் மீது போர் தொடுத்து நாசம் செய்ய வேண்டும், என்று யுதிஷ்டிரருக்கு திரௌபதி உபதேசித்து விட்டு அமைதியாகி விட்டாள். அதன் பின்பு பீமனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடுவே சம்பாஷணம் ஆரம்பித்தது. பீமசேனனுக்கு திரௌபதியின் கூற்று சத்தியமானதும், வெகு சிரேஷ்டமாகவும் தோன்றியது. தர்மராஜரைப் பார்த்து , அண்ணா! திரௌபதியினுடைய வசனம் மிக அற்புதம். பிரகஸ்பதியால் கூட இவ்விதம் பேச இயலாது.


கிராதார்ஜுனீயம்

 

 முதல் பாகம் | பாகம் இரண்டு (மகாபாரதத்தை எழுதிய வியாஸ பகவான் வனபர்வா பகுதியில் சிறுகதையாக எழுதியுள்ளார் வேடன் உருவத்தில்வந்த சிவபெருமானுக்கும் வில் விஜயனாகிய அர்ஜுனனுக்கும் இடையே நடந்த யுத்தம் பற்றியது. இந்த (கிராத = வேடன்) கதையினை கிராதார்ஜுனீயம் என்ற ஒரு பெரும் காவியமாக எழுதியவர் மிகவும் புகழ் பெற்ற கவி பாரவி ஆவார். இந்த காவியம் சமஸ்கிருத மொழியில் உள்ள ஐந்து பெரும் காவியங்களில் ஒன்று ஆகும். கிராதார்ஜுனீயம் காவியத்தில் அநேக அரச நீதிகள்


ஜராசந்தன் வதம்

 

 மகத நாட்டு அரசன் பிரகத்ரதன். காசிராஜனுடைய இரட்டைப் பெண்களை விவாகம் செய்து கொண்டான். இரு மனைவியர் மீதும் அளவில்லா அன்புடையவனாக இருந்தான். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அரசன் பிரகத்ரதனுக்கு சந்தானப் பிராப்தி இருக்கவில்லை. அதனால் மிகுந்த மன வருத்தம் உடையவனாக இருந்தான். ஒருமுறை வனத்தில் வசிக்கும் கௌசிகர் முனிவரை சந்தித்தான். தனக்கு புத்திரப் பேறு வேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். மாமரத்தினடியில் உட்கார்ந்திருந்த அவர் மடியில் ஒரு மாங்கனி வந்து விழுந்தது. கௌசிகர் முனிவர் அந்த கனியினை


குமார சம்பவம்

 

 பாகம் நான்கு | பாகம் ஐந்து இவ்விதமாக கங்கை கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த நாணல் புதர்களுக்கு மத்தியில் குமரன் ஜனனம் நிகழ்ந்தது . கங்காதேவி குமாரனை நன்கு கவனித்து வளர்த்து வருகிறாள். ஒரு சமயம் சிவன் பார்வதியுடன் ஆகாய மார்க்கமாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் கங்காதேவியுடன் இருக்கும் குமாரன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஈஷ்வரன் குமாரனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகிறார் அதனைக் கேட்டு அகமகிழ்ந்த பார்வதி குழந்தை குமரனை கைலாச பர்வதத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.


குமார சம்பவம்

 

 பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து ஈஷ்வரனுக்கு பார்வதியுடன் விவாகம் நடைபெற வேண்டும். அதனால் அவரது சார்பாக இமவானிடம் பெண் கேட்பதற்கு சப்தரிஷிகளும் செல்கின்றனர். ரிஷிகளை எதிர் கொண்டு வரவேற்க ராஜதானிகள் விரைந்து வருகின்றனர். இமவானும் சப்தரிஷிகளை வரவேற்று கௌரவப்படுத்துகிறான். ரிஷிகளும் பர்வதராஜனிடம் சிவனது அபிலாக்ஷைகளை எடுத்துக் கூறுகின்றனர். பர்வதராஜனும் மிகுந்த ஆனந்தத்துடன் விவாகத்திற்கு ஒப்புதல் அளிக்கிறான். தனது பரிபூரண சம்மதத்தை தெரியப் படுத்துகிறான். உலகம் உய்யும் பொருட்டு சிவனுக்கும் பார்வதிக்கும் விவாக


குமார சம்பவம்

 

 பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு எப்போது ஈஷ்வரன் மன்மதனை எரிதது பஸ்மம் ஆக்கினாரோ அப்போதில் இருந்து பார்வதி மிகுந்த மனகிலேசம் உடையவளானாள். அவள் தன்னைத் தானே பழித்துக் கொண்டாள். ஈஷ்வரனை இன்னும் சிரத்தையாக ஆராதனை செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டாள். வனத்திற்கு சென்று கடும் தவம் இயற்ற நிச்சயித்தாள். இதனைக் கேள்வியுற்ற தாய் மேனாதேவி மனம் கலங்கினாள். “மகளே! கடுமையான தவம் நீ ஏன் மேற்கொள்ள வேண்டும்? உனது கோமள