கதையாசிரியர் தொகுப்பு: ராஜூ முருகன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

வட்டியும் முதலும்…

 

 ஐநாக்ஸில் ‘ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போதுகூட மொபைல் மூலம் மெசேஜ், சாட் என்று பரபரப்பாக இருக் கிறார்கள். இன்டர்வெல்லில் ஆளுக்கொரு பக்கம் ”க்ராஷ் மாமா… நோ சான்ஸ்ரா!” என பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஷேர் ஆட்டோவில் ஏறினால் திமுதிமுவென இன்னொரு காலேஜ் கூட்டம். அத்தனை பேர் கையிலும் மொபைல்கள். கணிசமாக 3ஜி. இதிலும் பாதிப் பேர் இன்பாக்ஸைத்தான் மேய்ந்துகொண்டு இருந்தார்கள். ”மச்சி…


ஹேப்பி தீபாவலி

 

 ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாயல் டைரக்ஷனில் ‘அழகர்மலை’ ஆர்.கே.ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அப்படி இருக்கும்! ‘படையப்பா’ ரஜினி பேக்கோடு, ஃப்ரீ கக்கூஸில் இருந்து சாப்பாட்டுப் பொட்டலக் கூண்டு வரை சரக்கர்கள்… அரக்கர்கள். பெரிய பெரிய சரவணா ஸ்டோர்ஸ் பைகளுக்குக் காவல், பரோட்டா பார்சலோடு கணவனுக்கு வெயிட்டிங், மல்லிகை உதிரஉதிர மாமியாரைச் சபித்தல்… தாய்க்குலங்கள். மாலை பேப்பரை வெறிப்பது, வாட்ச் பார்த்துக் கதறுவது, அங்கும் இங்கும் ஓடி அலறுவது,


நேற்று நடந்தது

 

 புழுதி பறக்கும் மைதானத்தில் திசையெல்லாம் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, ஊடகம், வலை, வலைப்பூ, அமைப்பு, இயக்கம், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என தமிழகத்தின் மாயத் தீவிரவாதிகளால் நீக்கமற நிறைந்த பொழுது. ”நயன்தாராவுக்குக் கோயில் கட்டிட்டாய்ங்களாம்ல. போயி ஒரு தடவை கெடா வெட்டிப் பொங்க வெச்சுட்டு வரணும்!” என்றார் ஒரு பின் நவீனத்துவர். ”நாம தமன்னாவுக்குச் சிலை வைப்போம். ஃப்யூச்சர் அதுக்குத்தான். இருளாயி மாதிரி ஒரு கண்ணு. என் வனதேவதைப்பா அது. போஷாக்கு


சேகுவேராவும் ஓசி சாராயமும்!

 

 ஸீன்: 1 லொகேஷன்: பொலிவியா காடு எஃபெக்ட்: டே/நைட் 1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது. காடு செபியாடோனில் காட்டப்படுகிறது. பறவைகள் சத்தம், கிசுகிசு பேச்சு என்ற பின்னணி ஒலிகளுடன் டென்ட் அடித்த முகாம் லாங் ஷாட்டில் தெரிகிறது. சி.ஐ.ஏ. அதிகாரி பாய்ன்ட் ஆஃப் வியூவில், கேமரா நகர்ந்து போவது… டென்ட் உள்ளே நுழைவது. உள்ளே சுருட்டு பிடித்தபடி இருக்கிற சே குவேரா நிமிர்ந்து பார்ப்பது. க்ளோஸப்பில் அவரது ரியாக்ஷன். டைட் க்ளோஸில்


இன்று மற்றுமொரு நேற்றே! 24×7

 

 ”நமீதாவைப் பிடிக்குமா, பிடிக்காதா?” இதுதான் கிரியின் மனசாட்சியைக் குலுக்கும் கேள்வி. ‘என்னப்பா இந்தப் பொண்ணு இப்பிடிக் காட்டுது?’ என்பது சமூகக் கோபம். ‘ஆனா, முகத்துல இன்னும் இன்னொசன்ஸ் இருக்குல்ல…’ என்கிறதே ரசனைத் தாகம். நைட் ஷோ வந்த படத்தில் நமீதாவுக்கு இரண்டு குத்துப்பாட்டு. பயலுக்கு வெச்ச கண்ணு வாங்கலை. அது தைச்ச மனசு தாங்கலை. நமீ படத்தில் செகண்ட் ஹீரோயின்தான். ஏனென்று தெரியவில்லை… மெயின் நாயகியை அவனுக்குப் பிடிக்கவில்லை. இன்னொரு நாள் அந்த நாயகி மேலும் சாஃப்ட்கார்னர்