கதையாசிரியர் தொகுப்பு: ராஜி ரகுநாதன்

41 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் மண்ணே! வணக்கம்!

 

  அவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது. மனிதர்கள் தூரத்தில் இருந்தால் மனதுகள் அருகில் இருக்கும் என்று கூறுவார்களே! இங்கு ஏன் இப்படி? மகிழ்ச்சியாகத் துவங்கப் பட்ட இந்த என் பயணம் இப்படிப் பட்ட துன்பச் சுமையைச் சுமக்கத்தான் ஏற்பட்டதா? எனக்கு ஆறவில்லை. எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்தது… ….. ஜன்னல் சீட் கேட்டுப் பெற்றது நல்லதாகி விட்டது. பஞ்சுப் பொதிகளாக மேகக் கூட்டங்கள் நான் கற்பனை செய்ததை விட ஆச்சர்யத்தை அளித்தன.