கதையாசிரியர் தொகுப்பு: ராஜி ரகுநாதன்

41 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!

 

  எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, ‘அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது, பணத்தைக் கட்டுவது, பின் இரண்டு கிளாஸ் கூட அட்டெண்ட் பண்ணாமல் ஜகா வாங்கி விடுவது. நிறைய மனைவிமார்களிடம் இப்படி ஒரு பாஷன் இருக்கும் போலிக்கிறது! என் மனைவி உஷா முதலில் யோகா கிளாஸ் என்றாள். ‘சரி, தொலை’ என்றேன். பின், ‘மெடிடேஷன் கிளாஸ் ஆரம்பித்திருக்கிறார்கள்… இங்கேதான் அருகில் பள்ளிக்கூடக் கட்டடத்தில்… மாலை ஒரு மணி


டியூஷன்

 

  எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு வந்து விட்டேன். இப்போது அப்பா புதிதாக பிரைவேட் டியூஷனுக்கு ஏற்பாடு செய்த போது கவனமாகப் படிக்க வேண்டியிருக்குமே என்ற பயத்தை விட, டியூஷன் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆசை அதிகம் இருந்ததால் சரி என்று ஒப்புக் கொண்டேன். நான் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் போய்த்தான் தீர வேண்டும். அப்பாவின்


அவளுக்குப் புரிந்து விட்டது ….

 

  படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாம்? “என்ன? உனக்குள் நீயே முணுமுணுக்கற?” லேசாகப் புரண்டு அருகில் படுத்திருந்த மனைவியைக் கேட்டான் சதீஷ். அது ஒரு ஞாயிறு மதியம். “ஒன்றுமில்லை…. இந்தக் கதையில்….” –சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ராதிகா. சொன்னாலும் பலனிருக்காது. சதீஷ் தமிழ்ப் பத்திரிகைகள் படிக்க மாட்டன். அவன் படிக்கும் இங்கிலீஷ் புத்தகங்களை அவள்


ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை

 

  ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் அந்தப் பூச்சிக்கு அப்பேற்பட்ட விவேகம் வந்து வாய்த்திருந்தது.. ‘சிலந்திக் கூட்டுக் கோவிலில் சிவன் வாசிப்பாரா?’ என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை. பரந்து விரிந்த விஸ்வமே சரீரமாகக் கொண்ட விஸ்வேஸ்வரன், நாம் கட்டிய கோவிலில் வசிக்கிறாரல்லவா? அணுவை விடச் சிறியவன், பெரியவற்றிற்கெல்லாம்


மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்

 

  மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை. பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி. மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா. இந்த மூன்று தாய்மார்களும் உலக வழக்கப்படி சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படியும் செய்வார்களா என்று தோன்றும். ஆனால் தன் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த பதவியான வைகுந்தப் பதவியை பெற்று தருவதில் மிக மும்முரமாக இருந்த தாய்மார்கள் இவர்கள். ராமரும்,