கதையாசிரியர் தொகுப்பு: ராஜி ரகுநாதன்

41 கதைகள் கிடைத்துள்ளன.

நாலு சமோசா – ஒரு பக்க கதை

 

  பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில் (JNTU) கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் பி.டெக். படித்துக் கொண்டிருந்தார்கள். பரீட்சை நெருங்கி விட்டது. கொஞ்சம் ஊன்றிப் படிக்க வேண்டுமென்பதால் இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பது என்று தீர்மானமாயிற்று. ஒரு மாதம் லீவு போட்டிருந்தார்கள். பிரணதார்த்தியின் வீட்டின் முன்புறம் ஓர் அறை காலியாக இருந்தது. அந்த அறையில் படிக்கலாமென்று அவன் சொன்னான்.பாஸ்கரின் வீடு இங்கிருந்து


அறிவு தோற்க வேண்டும்

 

  அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மாட்டாளோ என்று சந்தேகம் வந்தது. தூறலில் நனைந்து கொண்டே பாட்டி வந்து சேர்ந்தாள். “தட்டில் சாப்பிடுவேளா? இலை வேண்டுமா?” என்று கேட்டாள் கற்பகம். “எல்லாம் தட்டில் சாப்பிடுவேன். இலைகிலை வேண்டாம்” என்றாள் பாட்டி. பருப்புக்கு நெய் ஊற்றியபோது நிமிர்ந்து பார்த்து லேசாகச் சிரித்தாள். அழுது விடுவாள் போலிருந்தது. “நெய் குத்திண்டு சாப்பிட்டு எத்தனையோ வருஷம் ஆச்சுடி” என்றாள். ‘என் பிரெண்ஸுக்கு எதிரில்


ஞானப் பறவைகளின் கதை

 

  மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு முறை ஜைமினி முனிவர் மார்கண்டேய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று “மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. ரகசியமாக உள்ள சில சாஸ்திர தத்துவங்களை தெரிந்துகொள்வதற்காக உங்களிடம் வந்துள்ளேன். அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும்” என்று


வேப்ப மரத்தை வெட்டிய போது …

 

  தாயும், குழந்தையும் கட்டிக் கொண்டு இருப்பது போல…குழந்தை பத்துப் பதினைந்து கைகளைக் கொண்டு தாயை இறுக்கிக் கொண்டு கிடப்பது போல…குழந்தையின் அணைப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் தாயும் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல…பூமித்தாயில் வேர்கள் பரந்து படர்ந்து அடி ஊடுருவிக் கிடந்தன. தாயிடமிருந்து பலவந்தமாகக் குழந்தையைப் பிரிதெடுப்பது போலத் தான் இருந்தது அந்த முயற்சி. இரண்டு ஆட்கள் கோடாலியும், கடப்பாரையுமாக அருகில் நெருங்கியபோது மௌனமாக எல்லாவற்றையும் துறந்த ஞானி போல்தான் பார்த்துக் கொண்டு நின்றது எங்கள் வேப்பமரம்.


சிவ பரிவாரம் கூறும் தலைவனின் இலக்கணம்

 

  சிவ​பெருமா​னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காண முடிகிறது.​ ​ அனைத்து தேவதைகளிலும் குடும்பமுள்ள தெய்வம் சிவன் மட்டும் தான் போலும். கைலாச குடும்பத்தில் ஒரு பரிவார பாவனை தெளிவாக தெரிகிறது. பரம சிவன் ஒரு நல்ல யோகி. ஆதி​ ​சக்தியான அன்ன பூரணி தேவி அவர் மனைவி. வயிறு நிறைய அன்னமிடும் அன்பு நிறைந்தவள். அதோடு மகா சக்தி நிரம்பியவள். அன்பான கணவன் மனைவி​.​ அதோடு அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. ஆனாலும்