கதையாசிரியர் தொகுப்பு: ராஜாஜி

1 கதை கிடைத்துள்ளன.

சபேசன் காப்பி

 

 சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை. “கொட்டை வாங்கி எவ்வளவு ஜாக்கிரதையாக வீட்டிலேயே வறுத்துப்பொடி பண்ணினாலும் டப்பாவுக்குள் போட்டு மூடிய சபேசன் காப்பிப் பொடிக்குச் சமானமாகாது” என்று மயிலாப்பூர் தியாகராய நகரிலுள்ள எல்லாப் பெரிய மனுஷாள் வீட்டுப் பெண்டுகளும் சொல்லுவார்கள். 1922 ஆம் வருஷத்தில் சபேசய்யர் காப்பி வியாபாரத்தை ஆரம்பித்தார். இரண்டு வருஷம். கஷ்டமில்லாமல் காலாக்ஷபம் செய்வதே கடினமாக