கதையாசிரியர் தொகுப்பு: ரமணி

21 கதைகள் கிடைத்துள்ளன.

காசி யாத்திரை

 

 எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் இந்தப் பையனை ஒங்க க்ளாசில ஒக்காரவக்கச் சொன்னாரு ” என்று காசியின் முதுகில் கையைவைத்து மெதுவாகத் தள்ளிவிட்டான். தயங்கியபடியே காசி வகுப்பில் நுழைந்துகொண்டிருந்த பொழுது, நடராஜன் சார், பியூன் ராஜனைப் பார்த்து, ” என்னடா!


கல்வித் தாத்தா

 

 ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு எத்தனை பக்கங்களில் இருக்கவேண்டும் என்று எழுதிப்போட்டதை என் பெரியண்ணாவிடம் நானும் என் தம்பியும் கலெக்டரிடம் மனுகொடுத்தபின் காத்திருப்பது போலக் காத்திருந்தோம். போன வருடத்தைய நோட்டுகளில் மிச்சமிருந்த பேப்பர்களைக் கிழித்துத் தைக்கச்சொன்னதில் என் பழைய நோட்டுகளில்தான் அதிகம் எழுதாமல் வெள்ளைத் தாள்கள் மிச்சமிருந்ததால், அவற்றைக் கொண்டு தைத்த நோட்டுகளை எனக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் புதிதாக


அன்பிற்குப் பாத்திரம்

 

 என் நெடு நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது. நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( எவர் ) சில்வர் டிஃபன்பாக்ஸ் அன்று எனக்குப் பள்ளிக்கு எடுத்துச் செல்லக் கிடைத்திருந்தது . ரொம்பச் சின்னதாகவும் இல்லாமல் அதேசமயத்தில் ஒரு சம்புடம் போல இருந்தாலும் ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் அதன் உடம்பில் ரெண்டு


எனக்கு வந்த கடிதம்

 

 திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் இருக்கும் அவர் வாய்க்குள். எப்போது அவர் பொன்மலைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எங்களுக்கு ஏதாவது தின்பதற்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ” மாவு மில் மாதிரி என்னடா வாய் அரைச்சுண்டே இருக்கு ” என்று அம்மா


தொலைந்துபோன கோடை

 

 மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக்