கதையாசிரியர் தொகுப்பு: யோ.பெனடிக்ற் பாலன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

விபசாரம் செய்யாது இருப்பாயாக

 

 என்றும் போல் இன்றும் றீற்றா நடுச்சாம வேளையில் இரவின் ஊமையான இருளில் நடந்து கொண்டிருக்கிறாள். எந்தநாளும், இந்த இரண்டுங் கெட்டான் பொழுதில், அவள் கையில் ஒரு ‘பாக்’கும் தூக்கிக் கொண்டு, தன்னந் தனியாகத்தான் செல்வது வழக்கம். அவளுக்கு இந்த நேரமில்லை, எந்த நேரமென்றில்லை – பகலிலும் இரவிலும் உழைப்புத்தான். இன்று அவளுக்கு முன்னால் அவளுடைய இரு பெண் குழந்தைகளும் போகின்றார்கள். அவர்களை இவள் அழைத்துக்கொண்டு போகிறாள். சிறிய காற்றோடு சேர்ந்து வீசும் மார்கழி மாதக் குளிரில் குழந்தைகள்


சமுதாய வீதி

 

 சைக்கிளிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு தமது தகரப் படலை அருகில் வந்த வேதநாயகம் கையைப் படலையில் வைத்துக் கொண்டு, அதைத் திறந்து உள்ளே போக மனம் ஏகாமல் அந்த ஒழுங்கை இருளிலே நின்றவாறு சோர்வுற்ற கண்களால் வீட்டை நோக்கினான். வீட்டுக்கு முன்னால் சடைத்து நிற்கும் மாமரத்தினதும், வீட்டினதும் இருட்டுருவங்கள் மனதைப் போர்த்து அழுத்தின. “அம்மாவுக்கு இதை எப்படிச் சொல்லப் போறன்” என்று யோசித்துத் தயங்கிய அவன் “சொல்லித்தானே ஆக” வேணும் என்ற எண்ணிப் பெருமூச்சு வெளிவர


அந்தோனியும் விசேந்தியும்

 

 “மனுக்குலத்தின் இரட்சகர் எனப் புனைந்து அழைக்கப்படும் யேசு, அர்ச்சசிஷ்ட கன்னிமரியம்மாள் வயிற்றில் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, இன்று இரவு நடுச்சாமம் பன்னிரண்டு மணியில், மாட்டுக்கொட்டிலில், நடுங்கும் குளிரில் பாலகனாய்ப் பிறக்கப் போகிறார். அந்தோனியின் மனமும் அவரின் வருகையையிட்டு, நிறைவெய்திக் களிகூர்கிறது. கொய்யாத் தோட்டத்தில் வாழும் பரம்பரைக் கத்தோலிக்கருள் அவனும் ஒருவன். கறுத்த நாடாவில் கோர்த்து, கழுத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும் சிலுவையே அதற்குச் சான்று. அவன், தன் குடிசையின் ஓரமாக, விரித்த பாயில், நீட்டி நிமிர்ந்து, கைகளின் முஷ்டிகளை,


மாரியாயி ஒரு மாடு தானே?

 

 இன்று யோசப்பின் மகளுக்குத் திருமணம். நானும் போகவேண்டியிருக்கிறது. யோசப்பர் எனக்கு ஒருவகையில் பெரியப்பாமுறை. நான் கிளறிக்கல் எடுபட்டு கொழும்புக்கு வேலைக்கு வந்தபோது அவர் வீட்டில் ஒரு அறையில் தான் இருந்தேன். அது என் அப்புவின் ஏற்பாடு. அங்கு அவர்களோடு இரண்டு வருடங்கள் இருந்த எனக்கு அவர்கள் வாழ்க்கை முறையும், போக்கும் பிடிக்காததால் அங்கிருந்து வெளியேறி இங்கு கொட்டாஞ்சேனையில் ஒரு அறை எடுத்து இருக்கிறேன். பிறகு திருமணம் செய்து மனைவியுடன் கொழும்பு வந்த போது ஒரு நாள் அங்கு


பட்டத்துக்குரிய இளவரசன்

 

 வெள்ளவத்தை கதிரேசன் கோயிலுக்குக் போய்விட்டு, லொறிஸ் விதியில் உள்ள தன் அறைக்குத் தனியாக நடந்து வந்த தெய்வ சிகாமணி கையில் கொண்டு வந்த செம்பரத்தம் பூக்களை, சுவரில் அவனே தொங்கவிட்டிருக்கும் சிவபெருமான் படத்தில் கொழுவிவிட்டான். கோயிலில் இருந்து புறப்படும் போது வாங்கி வாயில் போட்ட வெற்றிலை பாக்கைக் குதப்பியவாறு, சாறத்தைக் கட்டிக் கொண்டு, உடுத்திக் கொண்டு போன வெள்ளை வேட்டியை மடித்து பவித்திரமாக தன் சூட்கேசுக்குள் வைத்தான். இனி அடுத்த வெள்ளிக்கிழமை கதிரேசன் கோயிலுக்குப் போகும் போது


ஒரு பாவத்தின் பலி!

 

 கிறிஸ்துராசா கண் விழித்துக் கிடந்தான். “எப்போது விடியும்?” நெற்றியில் வலது கையை மடித்துப் போட்டு கால்களைச் சுதந்திரமாக நீட்டி எறிந்து கொண்டு நீட்டி நிமிர்ந்த கோலத்தில் அந்த இருள் கப்பிய சிறு முகட்டை வெறித்தவாறு கிடந்தான். நீண்டபொழுது அவ்வாறு தான் கிடக்கின்றான். அவனது இருதயத்தோடு இருள்தான் பேசுகிறது. அவனுக்குப் பக்கத்தில், அவனுடலை ஒட்டினாற் போல் மரியா சோர்ந்து போய், மறுபக்கம் சரிந்து, ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கின்றாள். அவனுக்காக, அவள் இப்படி இரவுகளில் களைத்துப் போய்க் கிடப்பது பழகிப்


கீழைக்காற்று

 

 பூரணி தூக்கம் கலைந்து கண்ணிமைகளை மெல்லத் திறந்தான். விடியற் பொழுதின் இளம் படரொளி அந்தப் படுக்கை அறைச் சன்னல் நீக்கல்களூடாகத் தன் விரல்களை நீட்டி உள்ளே தூங்கி வழிந்த இருள் முகத்தை இலேசாகத் துடைத்துக் கொண்டிருந்தது. அவள் இருகைகளாலும் தன் சோம்பிய முகத்தை யும், கண்களையும் கசக்கி விட்டுக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். குலைந்து போன நீளக் கூந்தலை வாரிக் கொண்டை கட்டினாள். கழன்று கிடந்த மார்புச் சட்டைப்பொத்தான்களைப்பூட்டி விட்டாள். சிதைந்து போன மேலங்கியை இழுத்துக் கால்களை


இப்படி எத்தனை காலம்?

 

 ஆசீர்வாதம் கோப்பாயிலிருக்கும் தன் தங்கச்சி வீட்டுக்குப்போய் விட்டுத் திரும்பிப் பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அப்போது மாலை நாலுமணிக்கு மேலிருக்கும். கவசவாகனத் தொடர் வண்டிகள் தற்செயலாக “வீதிவலம் வந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் இடைக்கிடை தலையைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தவாறுசைக்கிளை விரைவாக ஓட்டினான். கல்வியங்காட்டுச் சந்தைக்கருகில் வரும்போது உடலில் வியர்வை கசிந்து மூச்சு இழுக்கத் தொடங்கியது. என்றாலும் வேகத்தைக் குறைக்கவில்லை. முகவியர்வையைச் சேட்டுத்தலைப்பால் துடைத்து விட்டான். அவனுக்கு நாற்பத்தைந்து வயது


ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்

 

 கந்தசாமி பொழுது நன்றாக விடிந்து விட்ட போதும் பாயை விட்டு எழும்ப மனம் வராது, நெற்றியில் கை வைத்துக் கொண்டு குப்புறச் சரிந்து படுத்துக் கொண்டான். பக்கத்து வீட்டு மொட்டை ஜினதாசா கொழும்பு மத்திய சந்தைக்குப் போய், தேங்காய் வாங்கி வண்டியில் போட்டு விற்பதற்காக நாலரை மணிக்கே எழும்பி தன் மனைவியை எழுப்பி ஆரவாரஞ் செய்யத் தொடங்கிய போது கந்தசாமியின் நித்திரை முற்றாக முறிந்து விட்டது. அவன் கண்களை மூடிக் கொண்டு இடது காற் பெருவிரலால் பாய்


பட்டம் விடுவோம்

 

 கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாடிக்க கட்டிடத்தை கட்டுகின்ற “றிச்சார்ட்” என்பவன் யாழ்ப்பாணத்தவன். அவன் யாழ்ப்பாணத்திலே எட்டாம் வகுப்பு வரை முக்கித்தக்கிப் படித்து விட்டு அதற்கு மேல் படிப்பு ஓடாது என்று பாடசாலைக்குப் போகாமல் “கெற்றப்போல்” அடித்துக்கொண்டு திரிந்தான். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்துக்குப் பிறகு தோன்றிய நிலைமைகளுக்குள் தன்னை உட்படுத்தினான். அங்கு வாழ