கதையாசிரியர் தொகுப்பு: யுவன் சந்திரசேகர்

4 கதைகள் கிடைத்துள்ளன.

உறங்கும் கடல்

 

  மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது தொழில் அதர்மம். மாநில அரசு ஊழியர், ஐம்பது வயதை எட்டியவர், மதுரையில் பிறந்து வளர்ந்தவர், அங்கேயே வசிப்பவர் என்று பொத்தாம்பொதுவான தகவல்கள் சொல்லலாம். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோசனமும் கிடையாது தான். ஆனால், வெறுமனே அவர் அவர் என்றே தொடர்ந்து பேசுவதில், உங்களுக்கும் அவருக்கும் இடை யில் பெரிய அகழி உருவாகி விடுவது மட்டுமல்ல,


முடிவற்று நீளும் கோடை

 

  என்னுடைய இளவயது நினைவுகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர் பான அக்கா. இத்தனைக்கும் என்னுடைய ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின்போது அக்கா இறந்து போனாள். ஆனாலும், Y எழுத்தின் வலது மேல் பகுதியை ஒடித்துவிட்ட மாதிரி ஒயிலாக இடதுபுறம் சாய்ந்து வலதுகையில் சூட்கேஸைச் சுமந்து செல்லும் பெண்கள் யாரைப் பார்த்தாலும் பானு அக்கா ஞாபகம் வந்துவிடும். நடக்கும்போது அடிக்கடி மேலாடை விலகி, வலது நெஞ்சு குமிழ்மாதிரித் தெரியும். விக்கோ டர்மரிக் மணம் கமழ நடப்பாள். அவளுடைய


சுவர்ப்பேய்

 

  வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும். வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில்


நான்காவது கனவு

 

  யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புற நகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் உரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா? அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில்