கதையாசிரியர் தொகுப்பு: ம.காமுத்துரை

25 கதைகள் கிடைத்துள்ளன.

நோக்கிப் பாய்தல்

 

 ”பேசாதடா… பேசாதடா… கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்” – சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை எடுத்து, எதிரில் இருந்தவனின் முகத்தில் அடித்தான். அடி வாங்கியவனுக்கு நெற்றியில் பணியாரமாகப் புடைத்துவிட்டது. அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க கூழுப் பிள்ளைக்குத் திராணி இல்லை. அசைந்து அசைந்து தாங்கலான நடையுடன் நகர்ந்தார். சுளீரென வெயில் ஏறிக்கொண்டு இருக்கிற காலை நேரம், சனிக் கிழமைப் பொழுது. பள்ளிக்கூடத்துக்கான பரபரப்புகள் ஏதும் இல்லாமல், வீதி இயங்கிக்கொண்டு இருந்தது.


நிரூபணம்

 

 வந்த பில்லை கல்லாவில் வாங்கிப் போட்டார் செல்லப்பா, “அம்பது காஸ் சில்ற இருக்கா?” சட்டை பையையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய வாடிக்கையாளர் – கல்லாவின் மீது இருந்த வறுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். வழக்கம்போல சில்லறைக்கு மிட்டாய் கொடுத்துக் கணக்கை முடித்தார் செல்லப்பா. “எல்லாக் கடைலயும் முட்டாய் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. ஒரு நாளைக்கு மொத்தமாச் சேத்து, பில்லுக்கு துட்டுக்குப் பதிலா முட்டாயத் தரப்போறேம் பாருங்க” – வாடிக்கையாளர் சிரித்தபடி வெளியேறினார். ராமனாதன் உட்காரவில்லை. மனசுக்குள் அலை


விருந்தாடி

 

 முதலில் பிள்ளைகள்தான் வந்தார்கள். ”பெரீம்மா…” மூன்று பேருமே நீ முந்தி, நான் முந்தி என முட்டி மோதிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும் இவளைத் தொட்டார்கள். ”நாந்தே ஃபஸ்ட்டு…” முதலில் தொட்டது மூத்தவள் சாந்திதான். என்றாலும் சத்தம் கொடுத்தவன், கடைசிப் பையன் கதிர்வேலு. நடுவிலவள் சரண்யா எப்போதும்போல அமைதியாக இருந்தாள். அவள், இவளைத் தொடவும் இல்லை, பக்கத்தில் மட்டும் வந்து நின்றுகொண்டாள். ”என்னாங்கடீ…” – துணி துவைத்துக்கொண்டு இருந்த இவள், ஆச்சர்யம் பொங்க, அனைவரையும் பார்த்துச் சிரித்தாள். ”நாந்தே ஃபஸ்ட்டு…


சாமீ

 

 ”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு முகம் கழுவி வாய் கொப்பளித்தார்.               ”மாசம் பொறந்துருச்சா சாமி..?” – கார்த்திகை பிறக்க இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ இருக்கு. அவருக்கென்று செல்ஃபில் இருந்து ஒரு சில்வர் டம்ளரை எடுத்து டீ ஊத்தித் தந்தான். மாசம் பொறந்துவிட்டால் நிறைய தம்ளர்கள் வேண்டியிருக்கும். ”நமக்கென்ன சாமீ


கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!

 

 ‘‘நாப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்… என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாசனைப் புகையிலையின் வீச்சும், பேச்சின் ஒவ்வொரு வரியின் முடிப்பிலும் ‘என்னா?’ என்கிற கேள்வியில் இயல்பாக