கதையாசிரியர் தொகுப்பு: மௌனி

3 கதைகள் கிடைத்துள்ளன.

கொஞ்ச தூரம்

 

 அன்று காலையில் எழுந்தது முதல், அவன் மனது சரியாக இல்லை . கிராமத்தில் தன் தனி வீட்டில் கடந்த ஆறுமாதமாக அவன் நடத்திய வாழ்க்கையில், அவன் மூளைக்கு ஒன்றுமே சாரமாகப்படவில்லை. படித்து முடிந்து, நகரத்தினின்றும் ஊர் சேர்ந்து அங்கேயே இருந்தான். நான்கு மாதத்திற்கு முன்பு, கடைசியாக, தன் கல்லூரி சிநேகிதி மிஸ். ரோஜாவிற்கு எழுதின கடிதந்தான் அவனுடைய பழைய வாழ்க்கை நினைவின் அறிகுறி போன்றது. எழுந்தவன் வாயில் திண்ணையில் நின்றுகொண்டு பார்த்தான். கீழிறங்கி தெருவின் வழியாக நடந்து


காதல் சாலை

 

 அன்றைய தினம் அன்று காலை அவன் மனங்கெட்டுத் திரிந்தான். அன்று நடுப்பகல் மேகமூட்டுக்கொண்டு இருண்டு இருந்தது. ஆலமரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள் தொங்கிக் கொண்டு தன்னை அழைப்பதைக் கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப் பார்த்தான். அதைப் பிடித்திழுத்து ஒன்றை வீசி ஆட்டிவிட்டு வழி நடந்தான். மாலையில் மேற்குவானம் மிகுந்த பிரகாசம் அடைந்திருந்தது. சூரியன் மறைந்தான். தன்னை அறியாது நடந்தான். காதல் காதல், எங்கும் காதல்தான், இவன் மனம் உடைந்தது.


குடும்பத்தேர்

 

 பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள், கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி, அவர் அந்தஸ்தும் கெளரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லா விஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு, பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசெளக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம்