கதையாசிரியர் தொகுப்பு: மேலாண்மை பொன்னுசாமி

18 கதைகள் கிடைத்துள்ளன.

விபரீத ஆசை

 

 முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் பயந்து சாவார்கள். காய்ந்த முள், கட்டையாக இரும்பாணி மாதிரி இருக்கும். தப்பித் தவறிக் காலை வைத்துவிட்டால், முள் ஏறுகிறபோதே வலியும் விஷமும் உச்சி மண்டைக்கு ஏறிவிடும். பன்னிக்குட்டி மாதிரி பாதம் அடித்து வீங்கிவிடும். முள்


சித்தாள் சாதி

 

 ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து நின்று வேக வேண்டும். ரத்தத்தை உறிஞ்சுகிற சிமென்ட்டுச் சாந்தில்கிடந்து வெந்து தணிய வேண்டும். சாந்துச் சட்டிகளைச் சுமந்து சீரழிய வேண்டும். செங்கல் சுமை, சாந்துச் சட்டிச் சுமை என்று மொத மாடிக்கும் ரெண்டாம் மாடிக்கும் படி… படி… படிகளாக ஏறிச் சுமந்து சாக வேண்டும். ஆறு செங்கல்களை ஏற்றி விடுவார்கள். நல்ல சீமைச் செங்கல். கனத்த செங்கல்.


மெளனக் கேள்வி

 

 பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கிற பரமுவின் முகத்தில் அறைகிற காற்று, காதோர முடிக் கற்றைகளை இழுத்து அலைக்கழிக்கிறது. இடைவிடாத காற்றின் தாக்குதலால் முகமே காய்ந்து உலர்ந்துபோய், ஏதோ ஒரு நெறுநெறுப்பாகத் தோன்றுகிறது. பரமுவின் மனசு கிடந்து அலைபாய்ந்து வருகிறது. நிற்க இடம் இல்லாத காற்று என அற்றலைகிற நினைவுகள். ஊர் நெருங்க நெருங்க… அவள் மனசுக்குள் ஒரு தவிப்பும்


புது ராத்திரி

 

 இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது. முகத்தில் மனக் கொதிப்பின் தளதளப்பாகத் தெறித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள். ”ஓ வாய்லே புத்து பெறப்பட… நாசமாய்ப் போக… ஒருநாள் பேதியிலே ஒருமிக்கப் போக… என்னையாடி பேசுதே? சாதிமான் கண்ணுடி நா. வாழையா வம்சம் தழைக்குற வவுத்துலே வந்து பெறந்தவடி… என்னையாடி இப்படிப் பேசுனே? ஒன்னோட வாய்லே புத்து வளர்ந்து புதுப் பாம்பு குடியேற…” தக்


மதகதப்பு

 

 அருஞ்சுனைக்குள் ஒரு சூன்ய உணர்வு. யாரையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிற ஏக்க வேதனை. ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிறார், தெருக்கோடியின் கிழக்கு நுனியை. ராவுத்தர் வருவதாக இருந்தால், இந்தப் பாதையில்தான் வருவார். கிழக்கு முக்கு திரும்புகிறபோதே அவரது சைக்கிள் அடையாளம் தெரிந்துவிடும். கோடிக்கணக்கான சைக்கிள் மணிகளிலும் ராவுத்தர் சைக்கிள் மணியின் ஒலியைத் துல்லியமாக அடையாளம் கண்டுபிடித்துவிடுவார், அருஞ்சுனை. சைக்கிள் மணியின் விசையை அவர் கட்டைவிரல் அழுத்துகிற விதம், ‘மணிக்கு வலிக்குமோ’ என்ற பதைப்பில் பூப்போல அழுத்துகிறவிதம். அந்த வித்தியாசமான


இச்சிமரம்

 

 ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல் படித்து, பொறியியல் கல்லூரியிலேயே லெக்சரராகப் பணி! ஊரையும் தாத்தாவையும் பார்த்துவிட்டுப் போகலாமே என்று வந்த நேற்றிலிருந்து ஊரைப் பார்க்கப் பார்க்க இவனுக்குள் விநோதமான உணர்வுகள். புதிர்மயமான பிரமிப்புகள்… நீள நீள நினைவுகள்..! ரொம்பவே மாறியிருக்கிற மாதிரியான தோற்றம்… மாறாமல்இருக்கிற மாதிரியும் ஒரு மயக்கம். கணுக்கால் வரை தவழும் கைலியும், அரைக்கை சட்டையுமாக வெளியே வந்தான். பால் பண்ணைக்


மனித மனசு

 

 ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான். வைகாசி மாச அக்னி நட்சத்திர வெயில், தீயை அள்ளிக் கொட்டுகிறது. காற்றில்லாத வெயிலின் உக்கிரத்தில் முதுகுத் தோல் காந்துகிறது. இப்பவும்… எப்பவும் போலவே நீல நிறத்து உல்லன் சால்வையைத் துண்டுக்குப் பதிலாக தோளில் போட்டிருக்கிற லட்சுமணன். அவனது கண்ணில் இரை தேடும் பருந்தின் நிழல். தந்திரம் பதுங்கியிருக்கிற உதடுகள். முன்னத்திக் கால்களை அகலப் பரத்திக்கொண்டு வர மறுத்து


காலமாற்றம்

 

 ‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது. ஏதாச்சும் செய்தாகணுமே என்று உந்துகிற லௌகீக வாழ்க்கை. பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானம். வரிசையாக வேப்ப மரங்கள். இடையிடையே கட்சிக் கொடிக் கம்பங்களின் சிமென்ட்டுத் திண்ணைகள். நிழல் முழுக்க ஆட்கள். பஸ் ஏற வந்தவர்கள்… பஸ் பார்க்க வந்தவர்கள்… எந்த வேலையும், ஜோலியும் இல்லா மல் ஆடு புலி ஆட்டம் ஆடி, பொழுதைக் கழிப்பவர்கள்…