கதையாசிரியர் தொகுப்பு: மேரித்தங்கம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்

 

  பள்ளிக்கு இரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்‌ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்த போது, அது பியூலாராணியை அவ்வளவாக பாதிக்கவில்லை. “வரட்டுமே; அதனால் என்ன!” என்றாள் மிகச் சாதாரணமாய். சி.இ.ஓ. வையும் அவருடன் வருகிற ஆசிரிய பட்டாளத்தையும் சமாளிப்பது அப்படி ஒன்றும் சிரம்மான காரியமில்லை அவளுக்கு. ப்யூலாராணி ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு கணிதம் கற்றுத் தருகிறாள். இன்ஸ்பெக்‌ஷன் தினத்தில் என்ன பாடம் நடத்துவது; என்ன மாதிரி கேள்விகள் கேட்பது என்கிற நெளிவு சுளிவுகளும்


வலி உணர்ந்தவன்

 

  கல்லூரிகள் எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம்களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப் போய்க் கொண்டிருக்க, அல்லது கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, இவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல் பூக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது. அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் இன்னும் ஏன் வேலைக்குப் போய்க்