கதையாசிரியர் தொகுப்பு: மு.முருகேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

மயிரு

 

  மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது. இரண்டு பெட்டிக்கடைகள், மூன்று டீக்கடைகள், வாடகை சைக்கிள் கடை, பூக்கடை, டிபன் கடை, பிரியாணி ஸ்டால், பிராய்லர் கறிக்கடை, ரெடிமேட் துணிக்கடை, மளிகைக் கடை, உரக்கடை, ஓமியோபதி கிளினிக், செல் ரீசார்ஜ் கடை, ‘இதோ நான் நகரமாகி வருகிறேன் பார்…’ என்பதற்கான அடையாளமாய் ஒரு ஃபாஸ்ட் புட் கடை. இதில் மீதமிருக்கிற இரண்டு கடைகளில் ஒன்று பழனியின்