கதையாசிரியர் தொகுப்பு: மு.பஷீர்

12 கதைகள் கிடைத்துள்ளன.

கை எட்டும் தூரம்

 

 ஒரு பிடிப்பற்ற மனநிலையுடன் நடந்து கொண்டிருந்தான் இவன். ஹிருதயத்தினுள் சில தீர்மானங்கள் உள்ளறைந்து வலுவேறியிருந்தன. இந்தச் சமூகமும் , சுயவாழ்வும் கேள்விகளாய் அச்சுறுத்தின என்பது மட்டுமல்ல! ஒவ்வொரு தனிமனித வாழ்வு சார்ந்த காயங்கள், பிறமனிதனது பார்வையில் பெரிதாய் உறைக்கவேயில்லை என்பது யதார்த்தம். இயந்திரமயமாகிப் போன மனித மனங்களில் ஈரம் சிறிதுமில்லை. இன்று-ஒரு தீர்மானம் அடிமனதில் உறுதியாய் பற்றிக் கொண்டுவிட்டது. அனுமானமின்றி, ஆத்ம திருப்தியாய், இந்த உலக ஒட்டுறவுகளிலிருந்து நிரந்தரமாய் நீங்கிவிடும் பிரயத்தனம் இது ஒரு கோழைத்தனமான முடிவென்றா


பாம்பு மனிதன்

 

 உயரக்கிளை பரப்பியிருந்த மரத்தை வெறித்துப் பார்த்தார் முஸ்தபா வாத்தியார். சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து சரிந்து கிடப்பது அவருக்கு சௌகரியமாக இருந்தது. மனதிற்குள் ஏதோ ஒரு அழுத்தம் இனம் புரியாத நெருடல் விரக்தியாய், வெறுமையாய் மூளைக்குள் கவிந்தன. ஜனமும், மரணமும் மனித வாழ்வின் எல்லைக் கோடுகளா? இடைப்பட்ட ஜீவித இருப்பில் மனிதன் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்துச் சாதனை நிகழ்த்த வேண்டாமா? என்பது குறித்து அவருக்கு ஒரு வெறித்தனமான உடன்பாடு இருந்தது. நரம்புகள் தளர்ந்து இளமை வற்றிய


மைமூன் ஆச்சி

 

 மைமுன் ஆச்சியை அறியாதவர்கள் யாரும் எங்கள் கிராமத்தில், இருக்க முடியாது. எனது உம்மம்மா அத்தனை பிரசித்தம். இந்தப் பிரபலத்தின் ஆதார சுருதியே அவளது மனித நேயம்தான் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். யாருக்கு சுகக்கேடு, யார் வீட்டில் ஜனாஸா, எங்கெல்லாம் கலியாண வீடு, அத்தனை இடங்களுக்கும் திடீர் பிரசன்னம் தந்து ஒரு விசைக் கருவியாக, சுழன்று இயங்குவாள். நோய் கண்டவருக்கு மூலிகை வைத்தியம் பார்ப்பதில் மிகக் கெட்டிக்காரி. நோயினால் உழன்று சங்கடப்பட்ட பலர், இவரது சிகிச்சையினால் தேறியிருக்கிறார்கள்.


குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும்

 

 உறக்கம் கலைந்து வெகு நேரமாகியும், ஜன்னலினூடே தெரிந்த அதை, வெறித்துப் பார்த்து புன்முறுவல் பூத்தேன். மின்சாரம் செத்த இரவுகளிலும், காலை, மாலை, எப்போதுமே, அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுப்பேயில்லை. “எதை?” என்று நீங்கள் அறிந்துவிடத் துடிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது. உங்கள் சங்கடத்தைக் கலைத்து ஒரே போடாய் போட்டு உடைத்து விடலாம்தான். சற்றே பொறுமை காக்க! இருளின் திட்டுக்குள்ளும், வெளிச்ச விகசிப்பிலும், காட்சிகள் மின்னலடிக்கும். இதைக் கண் இமைக்காது பார்த்து ரசிப்பதில், என் அலாதி கவனம்.


தலைப்பிறை

 

 அருள் சுரக்கும் ரம்ழான் மாதம் இது. எல்லோரது முகங்களிலும் உற்சாகம் அணையுடைத்துப் பாய்கிறது. நன்மைகளைக் கொள்ளை அடிக்கும் மாதமிது என்பார்கள். இருக்காதா பின்னே? நன்மைகளை எதிர்கொள்ளலாம். ஆன்மீகச் சுகத்தை அருகணைத்துக் கொள்ளலாம்; என்பது விசுவாசிகளின் கணிப்பு. மேகத் திரை விலகும் முன்னிரவில், இரு முனையும் கூர்மையான பிறைநிலா, வானில் ரம்மியமாக பவனி வந்தது. ஜன்னல் திரை விலக்கி, எட்டிப் பார்க்கும், பருவப்பெண்ணின் பொலிவு முகம் போல், அது கோலம் காட்டியது. தலைப்பிறையைத் தரிசித்துவிட்ட பேரானந்தம் சிறுவர், பெண்கள்


வீட்டில்

 

 தெப்பமொன்றில் இருந்தபடி கடற்காற்றை அனுபவித்துச் சூழலை வெறித்துப் பார்த்தான் பீட்டர். மஞ்சள் கிரகணம் கவிந்து, உறைக்கத் தொடங்கிய முன் காலைப் பொழுது, எதிலும் பிடிப்பற்ற ஒரு வெறுமை உணர்வு அடிமனதை நெருடியது. நீர்கொழும்பு கடற்கரை, எப்போதும் போல் இரைச்சலும் சந்தடியுமாக ஓசைகொண்டு ஒலித்தன. மீன் சந்தையும் சிறுசிறு கடைகளும், களைகட்டிப் போயிருந்தன. இவனுக்கு இவை பழகிப் போன எதிர்கொள்ளல் தான். என்றாலும் உற்சாகமூட்டும் சங்கதிகளாய் இல்லை. இவனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலும் , கடற்கரையில் தான், இவனது


இது இவர்கள் உலகம்

 

 மேல் மாடியில் நின்று சிரத்தையோடு பாதையை வெறித்துப் பார்த்தேன். கீழே நெடுஞ்சாலை பரபரப்பாகிக் கொண்டிருந்தது. விரையும் வாகனங்களும், பாதசாரிகளுமே நகரின் பிரதான பாத்திரங்கள். வேலை தேடித் தேடி அலைந்து அலுத்து, இறுதியில் அறிந்த ஒருவரின் அனுசரணையில், ஒருவாறு வேலை கிடைத்தது. இது பிரமாதமான வேலையில்லை. சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும் ஹோட்டல் ஒன்றில், பில்மாஷ்டர் வேலை. பட்ட துன்பங்களுக்கு மாதம் மூவாயிரம் கிடைக்கிறது. இப்போதைக்கு இது பரவாயில்லை . ஆனால், மிகச் சமீபத்தில் எனக்கு இங்கு வேலைமாற்றம் கிடைத்திருப்பது


ஒரு ஜன்னலோர இருக்கை

 

 சூரியன் சுட்டெரித்துக் கொளுத்தும் உச்சிப்பொழுது வீட்டு வேலைகளை சற்றே முடித்துவிட்ட ஆசுவதத்தில் இளைப்பாற ஜன்னலருகில் வந்து அமர்ந்து கொண்டேன். தபால்காரனின் மணியோசை எப்போது கேட்கும்? என்ற ஆர்வத்தில் காத்துக்கிடக்கிறேன். தபால்காரனின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பது என்பது, இப்போது நமது சமூகத்தின் கட்டாயக் கடமையயென்றாகிவிட்டது. ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் யாராகிலும் ஒருவர் வெளிநாடு சென்றிருக்க வேண்டுமென்பது, தவிர்க்க முடியாத நிர்பந்தம். நான் இயங்கும் சுற்றுச் சூழல், என்னைக் கலவரப்படுத்தி உணர்வுகளால் பழிவாங்கித் தீர்க்கிறது. வாட்டும் தனிமையும், சூனிய வெறுமையும்


அக்னி மழை

 

 கல்லூர்க் கிராமம் விடியலுக்கு முன்னே பரபரப்புக்கு ள்ளாகியிருந்தது. இதமான சீதளக்காற்று மரங்களைத் தழுவி வந்து வீசியது. முன் தினம் இரவு அர்த்தராத்திரியில் நிகழ்ந்த அந்தக் கொடூரம், கிராமவாசிகளின் உரையாடலுக்கு கருப்பொருள் ஆனது. சம்பவத்தை செவியுற்ற கணத்திலிருந்து என் மனம் அதிர்ந்து துடிக்கிறது. இது போன்ற துர்ச்சம்பவங்களால், எனக்குள் இருக்கும் இலக்கிய ஆன்மா விகசித்து, அலறத் தொடங்கவிடும். கண்ணுக்கு நேரே சாட்சியாகிப் போன வேண்டாத நிகழ்வுகள், மனதில் சங்கடத்தை தோற்றுவிக்கின்றன. நிஜங்கள் மட்டும் கதைகளாகி விடுமா? இதை ஒரு


மிருக உத்தி

 

 குளிரில் விடிகாலை உறைந்திருந்தது. சோர்வும் உறக்கக் கலக்கமுமாக உற்சாகம் பிறக்கவில்லை. வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, சூழ்ந்திருந்த மரம், செடிகளை அர்த்தமின்றி வெறித்தேன். எங்கும் புகை கவிந்த பனிமூட்டம். மாமரத்தி லிருந்து முத்துத் துளிகள், சொட்டுச் சொட்டாய் தரையை நனைத்தன. கூ…..வ்!, கூ………வ்!, எங்கோ கிளையொன்றில், லதா மங்கேஷ்கார், தொனியில் குயில் கூவத் தொடங்கியது. சுருதியிசை, குருதிநாளங்களை தொட்டுலுப்புவது, ஒரு ஆனந்த லாகிரிதான்! குயிலிசைதான் எத்தனை இன்னிசை! சூட்சும, ராகபாவ, குழைவு. இந்தத் தேனாமிர்த இசை லயத்திலே, மயங்கிச்