கதையாசிரியர் தொகுப்பு: முல்லை பி.எல்.முத்தையா

122 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கையின் பகுத்தறிவு

 

  ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு காக்கை, சற்று தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவனோ வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய எச்சில் இலைக்கு காத்துக் கிடக்கிறது காக்கை அவன் கையைக் கூட அசைக்கவில்லை. காக்கை பொறுமை இழந்து, “ஏ, மனிதனே! நீ உண்ணும் நீ உணவில் ஒரு பிடி அள்ளி வீசக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டது. “ஏ ,


வீரத்தாய் கூறினாள்

 

  “அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன். ”கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக் கவனமாகக் கேள்.. மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன். உன் தந்தையும் தன் கடமையைச் செய்துள்ளார். கொல்லன் கடமை வேல் வடித்தல் உன் கைவேல் அதனைக் காட்டுகிறது. மன்னனும் உனக்கு நல்வாழ்வு அளிக்கத் தவறவில்லை . “தாயே, நான் என்


கேடயம் தா

 

  மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான். புலவர் அரிசில் கிழர் அவ்வழியே வந்தார். நேற்று கொல்லப்பட்ட மறவனையும் அவன் தம்பியையும் நன்கு அறிந்திருந்தார். இங்கே துள்ளிக் கொண்டிருக்கும் மறவனைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்தது. ஏன் தம்பி வீணாகக் கத்துகிறாய். நீ கேடயத்தோடு போய் கல்மறைவில் நின்றாலும் தப்பமாட்டாய். நீ போரில் கொன்றாயே; அவன் தம்பி


ஒரே மகன்

 

  முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான்; இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன் ! மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது… கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி . தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்; வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்.. “போ, மகனே, போ… “போர்க்களம் அழைக்கிறது,


பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்

 

  வயதான மறத்தி. நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஓட்டியிருந்தது. போருக்கு சென்ற புதல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். “போர்க்களத்தில் உன் மகன் புறங் கொடுத்தான்” என்று கூறினர் பலர். அது கேட்டு ஆர்த்தெழுந்தாள் அம் முது மகள். “என் மகன் புறங் கொடுத்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினங் கூறி, வாளேந்திப் போர்க்களம் நோக்கி ஓடினாள். போர்க்களம் புகுந்தாள். எங்கும் பிணக் குவியல். பிணங்களை