கதையாசிரியர் தொகுப்பு: முரளிகண்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

துண்டு சிகரெட்

 

  எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது. அதற்கு எங்கள் குலதெய்வமே காரணம். படையலில் சுருட்டு இல்லாவிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி அதை வாங்கிவர என்னை விரட்டி விடுவார்கள். அனைவருக்கும் தேங்காய் பழம் பிரித்துக் கொடுத்த பின் சுருட்டை மட்டும் கோடாங்கியிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.புதிதாய் வந்த கோடாங்கிக்கு சேவல் மார்க் சுருட்டு ஒத்துக்கொள்ளவில்லை. சாமி கும்பிடும் ஒரு நாளில் என்னை