கதையாசிரியர் தொகுப்பு: மும்தாஜ் யாசீன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுச் சின்னம்

 

 சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் ‘டேய்…. மகனே ‘ என எழுப்ப முடியாது. கன்னத்தில் ‘பளா ‘ ரென்று அறைந்து, ‘என்ன முறைக்கிறே ? ‘ என்று கேட்க முடியாது. நீண்டுக்கொண்டே போகும் பகலும், உறக்கமே வராத இரவுகளும் இனி இல்லை. பக்கத்தில் படுத்து தன் பிரியமுள்ள மனிதர்களுக்காக ஏங்கி, சோக கதைகள் சொல்லி, கண்ணீர் விடும் சக கைதிகளின் கதைகளை இனிக் கேட்க


பசி

 

 அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம் இருக்கிறதோ தெரியவில்லை. மனுஷனின் ‘மணீஸ் கபே’யின் அப்படி ஒரு ருசி. வாரி அணைத்துக் கொள்கிற மாதிரி , வாசனை கடைக்குச் சற்று எட்டத்திலிருந்தே மூக்கை அரிக்கும். ஆறுமுகத்தேவர் தினமும் அந்தப் பக்கமாகத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். மடியில் கனமிருக்கும் சில சமயங்களில் முந்தைய ருசியின் எச்சங்களாக ஆசை துளிர்ப்பதுண்டு. தோசையின் இதமான முறுகலுடன் நெய்யின் வாசனையும்