கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் செ.இராஜேஸ்வரி

9 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டணமா…

 

 இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர மணி பன்னிரெண்டு ஆகியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் வந்து அமர்வதும் பின்பு சற்று நேரம் நிற்பதும் கொஞ்சம் சத்தமாக பேசுவதும் கொஞ்சம் ரகசியமாக பேசுவதும் என நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த அக்கா இப்போது வேலை எதுவும் செய்வதாக . வேலை எல்லாம் பெண்டிங் ஆக இருக்கிறது.


தன் பிள்ளை தானே கெடும்

 

 ரமணியை அனுப்பிவிட்டு வனரோஜா வீட்டிற்குள் வந்தாள். காபி குடித்துக் கொண்டே இருந்த தனபாலன் ‘’என்னவா ரகசியமா பேசிட்டு போகுது’’ என்று கேட்டான் ‘’ஆமாம் அவளுக்கு என்ன, அவள் மாமியார் ஆம்பள புள்ள பெறச் சொல்லுதாம். ஏற்கனவே ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு. எந்த சொத்து பத்து வச்சிருக்கா? ஆம்பள புள்ள பெத்து அதை கட்டி ஆளப் போகுது? சும்மா கிழவி பேச்சை கேட்டுக்கிட்டு நாளை தள்ளிக்கிட்டே போறாள். நமக்கென்ன? சொன்னால் கேட்டால் தானே? இனி அஞ்சாவது மாசம் வருவாள்.


ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு

 

 அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த ஸ்க்ரீனை விலக்கி வெளியே வந்து அங்கு நின்றிருந்த தன் பக்கத்து வீட்டு பார்வதியை உள்ளே வா என்று சொல்லாமல் ‘உட்காருங்க என்ன விஷயம்’ என்று திண்ணையிலேயே அமர்த்தி விட்டாள். உள்ள பாப்பா படிச்சுட்டிருக்கா; நம்ம இங்கேயே உட்கார்ந்து பேசுவோம். அவளுக்கு நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட். கணக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னைக்கு தான் டியூஷன்-ல மிஸ்


காதல் கிளிகள்

 

 வீடு வெறும் வீடாக இருந்தது நாளை காலை அந்தமானுக்கு பயணம் மகள் சிந்தாமணி நிம்மதியாக தூங்குகிறாள் அவளுக்கு இது பிறந்த வீடு. எனக்கு நான் கட்டுன மாளிகை. பதினைஞ்சு பதினாறு வயசுல கட்டினது. மூக்கமாவுக்கு ஐம்பது வயது ஒருக்கும் அள்ளி முடிந்த கூந்தல் சிவந்த தேகம்; தோள்களில் கிளிப் பச்சை; ஜாக்கெட் போடும் பழக்கமில்லை ஆனால் இரண்டு முந்தானை மடித்து போட்டிருப்பாள் மூக்குக்கு அருகில் ஒரு கருப்பு மறு; சிங்கப்பல் சிரிப்பு; வசீகரமான கிராமத்து முகம்; சொந்த


கதீஜம்மாவின் சந்தோஷம்

 

 தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார். அவனை ஆசான்கிட்ட உட்கார்த்தி வச்சுட்டு வந்தேன். யாரோ உள்ள இருக்காங்க அவுங்க போனதும் வந்து கூப்பிடச் சொன்னேன். இந்த கழிச்சல்ல போவாள் நேத்து அவர்கிட்ட பாதிச் சம்பளத்தை பிடுங்கிட்டா கேட்டால் மூத்தவளுக்கு கல்யாணமாம் மொத்தமா தொகை வாங்கிட்டுத் தானே அவரை விட்டாள். இப்ப மாசாமாசம் வாங்குனா எப்படி நேத்து வந்தவர்கிட்ட