கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் க.மோகன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நான் அம்மாவாகிட்டேன்

 

 நான் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தேன். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்… அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை கட்டிபிடித்து அழுவது. ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் மட்டும் தானே அழ முடியும். மழையில் நனைந்து அழுது கொண்டு போனால் யாருக்குத் தெரியப் போகிறது. அப்படித்தான் என் நிலைமையும் என்றாகிப் போனது. அடியே… இப்படி ஒக்காந்து


மழை

 

 இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில் மாட்டப்பட்டிருந்த அங்கவஸ்த்திரத்தைக் கர்வத்துடன் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, தூசி படிந்திருந்த வஸ்த்திரத்தை எடுத்து உதறித் தோளில் போட்டுக் கொண்டு, முகத்தை மட்டும் திருப்பித் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அவரின் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னாச்சு இந்த மனுசனுக்கு… என்ன விசயம் என்பதைக் குறிப்பால் தன்