கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் ஆ.சந்திரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கமலா வீட்டோடு பறந்து போனாள்

 

 இரவு கனவில் தன்னுடைய தாத்தாவின் ஆவி சொன்ன அந்தப் பேருந்தில் ஏறினாள் கமலா. அவர் சொன்னதற்கு மாறாகக் காலியாக இருந்த அந்தப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தாள். தன்னைவிட இருமடங்கு வயதையுடைய பத்துபேர் இருந்தது எண்ணியபோது தெரிந்தது. தாத்தா கானாமல் போனபோது அவர் பறந்து போனதாக அந்த ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. அப்போது அவள் சிறுமியாக இருந்ததால் அது பற்றிப் பெருசாக அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு பலமுறை தாத்தாவின் ஆவி நல்லிரவில் வந்து அவளைப் பார்த்து டாட்டா


மதி – மதுமிதா

 

 படியில் ஏறிக்கொண்டிருந்தபோது வழக்கம் போலதான் நடந்தார். என்றாலும், இன்று ஏதோ இனம்புரியாத ஒரு பதட்டம் மதியிடம் இருந்தது. அதுபோன்ற அவஸ்தையை அதற்குமுன் பலமுறை அனுபவித்திருக்கிறார். என்றாலும் இனி அவரால் அப்படி இருக்க முடியாது. ஏன் இருக்கவும் கூடாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால், “அப்படி இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்” என்று அவர் எதிர்பார்க்காமல் இல்லை. அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்திருந்தார். அதுதான் அவருடைய வாழ்வின் முதல் ஆசை. ஏன் அதுதான் வாழ்வின்