கதையாசிரியர் தொகுப்பு: முனிஸ்வரன் குமார்

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்மகன்

 

 அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும். ஆனால் ஆணுக்கு ஒரு ஒய் குரோமோசோமோடு இரு எக்ஸ் குரோமோசோம் அமைந்து விட்டால் அந்த ஆண் மிகுந்த பெண் தன்மை கொண்டவராக இருப்பார். அதே வேளையில் ஒரு எக்ஸ்சோடு இரு ஒய் குரோமோசம்கள் இருப்பின் அவரிடம் அதிகமான முரட்டு ஆண்குணம் காணப்படும். இதுதான் அன்று கற்பிக்கப் பட்டது. தியாகு


யார் அந்த சண்முகம்?

 

 1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னைவிட ஐந்து ஆண்டு இளைய கிழடுகள் எல்லாம் தாத்தா பட்டத்தைத் தலைமேல் சுமந்து கொண்டாடி மகிழுகிற வேளையில் நான் மட்டும் இதோ அதோ என்று மனசுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன். செண்பகம் இருக்கிறாளே, அவள்


உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்

 

 “இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் தாங்க முடியாத பட்சத்தில் அது வெடித்திருந்திருக்கும் இந்த முறையும் அவன் போனை எடுக்காமல் இருந்திருந்தால். “ஹலோ, சோரி சார்… ரொம்ப சோரி. ரொம்ப இக்கட்டான நெலம. அதனாலதான் போன எடுக்க முடியல. இன்னும் பத்தே


இன்னும் அரைமணிநேரத்தில்…

 

 மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் குசுகுசுக்கிறார்கள் என்பது காதார விளங்கிற்று. “அப்படி என்னத்தச் செஞ்சிட்டோம் இப்படி மட்டமா நடந்துக்குறாரு தலைவரு?” புருவத்தைச் சுறுக்கி முகத்தில் ஒரு கடுகடுப்பை இழையோடச் செய்தபடி அமர்ந்துகொண்டான் மீண்டும் இருக்கையில். இனியும் அங்கிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லைதான்


அவள் போகட்டும்

 

 அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன். கண்களைத் தாண்டிச் செல்லும் பிரியாவை போ என்று புத்தி சொன்னாலும், போகாதே என்றல்லவா பாழாய்ப் போன மனசு சொல்கிறது. இந்த புத்திக்கும் மனசுக்கும் இடையில் நடக்கிற போருக்கு பலியானது கண்கள் தானா? என் கண்களில் இருந்து அருவியை ஒத்த கண்ணீர் பெருகுகிறதே! கொஞ்ச நேரம் கழித்து,