கதையாசிரியர் தொகுப்பு: மா.பிரபாகரன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

அரச கட்டளை

 

 சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம் சகலசுபிட்சங்களையும் பெற்றுத்திகழ்ந்தது. தனது காலத்திற்குப் பின்னும், தனது குடிமக்கள் மகிழச்சியாக வளமுடன் வாழவேண்டும் என்பது மன்னரின் விருப்பம். தனக்கு வயதாகிவிட்டதால் தனதுபுதல்வர்களில் ஒருவருக்கு முடிசூட்ட விரும்பினார். அவருக்கு மூன்று புதல்வர்கள். மூவரும் கலைகள்பல கற்றுத்தேர்ந்த வாலிபப்பருவத்தினர். கலைகளில் தேர்ச்சிமட்டும் போதுமா என்ன? நாடாளத்தேவையான தான்விரும்பும் ஒரு கூடுதல்தகுதியை அவர்தன் புதல்வர்களிடம் எதிர்பார்த்தார். அரசவை ஆஸ்தானப்புலவரின் ஆலோசனைப்படி


அம்மாவின் பிறந்தநாள்

 

 கோயிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை. வீட்டில் ரவாகேஸரி அல்லது பால்பாயாசம். பிறந்தநாள் ஓடிவிடும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அக்கம்பக்கத்தில் கொண்டாடுவதைப் பார்த்து அவர்களுக்கும் அந்தப்பழக்கம் தொற்றியிருந்தது. வளர்ந்துவிட்ட அவர்கள்தான் அம்மாவை வற்புறுத்தினார்கள். சண்முகநாதன் யோசித்தார். பையன் ப்ளஸ்டூ. பெண் இந்தவருடம்தான் பொறியியல்கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்திருந்தாள். அவருக்கும் அலுவலகத்தில் பதவிஉயர்வு வந்திருந்தது. இப்போது மனைவியின் பிறந்;தநாளும் சேர்ந்துகொள்ள இதுவும்அதுவுமாய்ச் சேர்ந்து சற்று விமர்சையாகக் கொண்டாடிவிடலாம் என்று தீர்மானித்தார். அவர்கள் குடியிருந்தது அடுக்ககத்தில். தொழில்வியாபாரம் பணிநிமித்தம் பல்வேறு மாநிலங்களிலிருந்து


கார்த்திகாவின் தவறு

 

 கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய பத்தாவது பிறந்தநாளுக்கு அவளின் அப்பா பரிசாகத்தந்தது. “நீ இதை ஸ்கூலுக்குக் கொண்டுபோகக்கூடாது! வீட்டுல வைச்சுதான் எழுதனும்!- என்றார் அம்மா@ கார்த்திகாவும் ‘சரி’ என்று தலைஆட்டினாள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதற்குக் காரணம் உண்டு@ அவளின் வகுப்புதோழி ஒருவள், ஏதேனும் விலைஉயர்ந்த பொருளை அவ்வபோது பள்ளிக்குக் கொண்டுவருவாள். அதை மற்றவர்களிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வாள். அவளைப்போன்று தானும்


ஒரு இளவரசியின் கதை

 

 நகரத்துஅங்காடியில் சில வீட்டுச்சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. ஒருநாள் இதற்காக நகரத்தைநோக்கி நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்தான் ராமன். அப்படிச் சென்றுகொண்டிருந்தவனை ஆள்அரவமற்ற இடத்தில் பூதம்ஒன்று வழிமறித்தது. அதுஅவனிடம் “என்னைத்திருமணம் செய்துகொள்”- என்றது. ராமன் ஒருகணம் துணுக்குற்றுப்போனான். பின் சுதாரித்துக்கொண்டு பூதத்திடம் “நான் ஏன் உன்னைத்திருமணம் செய்துகொள்ள வேண்டும்”-என்று கேட்டான். அதற்கு அந்தபூதம் “நான் ஒரு இளவரசி! முனிவர்ஒருவரின் சாபத்தால் இப்படி பூதமாகிப்போனேன்”-என்றது. ஏதோ காரணகாரியங்களை முன்னிட்டே பூதம் தன்னை வழிமறித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ராமன் “முனிவர் ஏன் உன்னை சபிக்கவேண்டும்”- என்று


தீவினை-நல்வினை

 

 ஒரு காட்டில் நிறைய பறவைகள்மிருகங்கள் வசித்து வந்தன. அது அங்கே கோடைகாலம். அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் குடிப்பதற்குப் போதியதண்ணீர் வசதிஇன்றி அவதிப்பட்டன. அந்தக்காட்டின் நீர்நிலைகளில் இருந்த நீர் நாளுக்குநாள் வற்றிக்கொண்டு வந்தது. இதுபோன்ற சமயங்களில் அந்தப் பறவைகளும்மிருகங்களும் அருகாமையிலுள்ள அடுத்தகாட்டிற்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அடுத்தகாட்டில் நீர்நிலைகள் ஏராளம் உண்டு. தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் அடுத்தகாட்டிற்குச் செல்வது என்று முடிவுசெய்து அதன்படி செல்லஆரம்பித்தன. அடுத்தகாட்டில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் தலைவர்வனராசன் வயதில் இளையவர். சற்றுக்குறுகிய