கதையாசிரியர் தொகுப்பு: மாலன்

39 கதைகள் கிடைத்துள்ளன.

கல்கி

 

 இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை. ‘பூமியின் கடைசி மனிதனுக்குக் காலை வணக்கங்கள் ‘ என்றது முக்கோணம். ‘என்னது? ‘ ‘பூமியின் கடைசி… ‘ அட்சரம் பிசகாமல் அதையே சொன்னது முக்கோணம். ‘யார் நீ? ‘ என்று அதிர்ந்தான் இவன். ‘அஸ்ட்ரோ கிரகத்து ஆசாமி. நேற்று இரவு பூமி எங்கள் கையில் விழுந்துவிட்டது.


புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

 

 “மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு” என்றார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள் அவர் கதைக்குள் வரலாம் என்றால், என் கதைக்குள் புதுமைப்பித்தன் வரமுடியாதா? கதைக்குக் கால் கிடையாது அண்ணாச்சி. இப்போதும், ‘சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக்கூட்டம்’ பரபரப்புடன் விரைந்தோடிக் கொண்டிருந்த, ‘பிராட்வேயும் எஸ்பிளனேடும்’ கூடுகிற சந்தியில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.ஒரு நதி மாதிரி போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தது. நகரை நகர்த்திப் போகும் நதி. எளிதில் இறங்கிக் கடந்துவிட முடியாத


கடமை

 

 வாசற்கதவை யாரோ உலுக்கும் சப்தம் தங்கம்மாவை எழுப்பிற்று.அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கனவில் விடுக்கும் அழைப்பைப் போல சன்னமாய் தொலைவில் கேட்டது. இப்போதெல்லாம் தங்கம்மாவிற்குக் கனவுகள் வருவதில்லை. கனவுகளை விற்று வாழ்க்கையை வாங்கியாயிற்று.அந்த வாழ்க்கை கணவன் கொண்டு வரும் சாராயத்தைப் போல ஆரம்பத்தில் மிதப்பைத் தருவதாய், போகப் போகக் குமட்டிக் கொண்டு வருவதாய்த் திரிந்துவிட்டது. கணவனை குடிகாரன் என்று சொல்லிவிட முடியாது. உழைப்பாளி.வாடகைக்குக் காரோட்டிக் கொண்டிருந்தான்.ஓடிக் களைத்த பொழுதுகளில் உடல் வலி தீரக் குடிப்பான். ஆனால்


நடுவர்கள

 

 வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்’ என முதல் பக்கத்தில் வீறிட்ட அந்தச் செய்தி, அந்த கோர சம்பவத்தை கற்பனைக்கு இடம் வைக்காத ஒரு கிரைம் நாவலைப்போல் விவரித்திருந்தது. வாசற்கதவிலேயே சாய்ந்து


கற்றதனால் ஆன பயன்

 

 மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு ரூபாய், நேற்றைக்கு பேங்க்கில் வாங்கி மடித்துப் பையில் சொருகியது. வாங்கியபோது, புதுசுக்கு உண்டான சுத்தமும் மொட மொடப்பும் தொடத் தொடச் சுகமாய் இருந்தது. ஊரான் பணம் என்றபோதிலும் என்னவோ ஒரு பெருமையில் மனது திரிந்தது. எடுத்து எண்ணச் சொன்னது என்றாலும் மாணிக்கவாசகத்திற்கு எடுப்பதற்குப் பயம். தொடுவதற்குக் கூச்சம் காரணம், இது லஞ்சப் பணம். தப்பை மொழுகிப்