கதையாசிரியர் தொகுப்பு: மானிப்பாய் சுதன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

என்னதான் உங்க பிரச்சினை?

 

  இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட தங்களின் சுகதுக்கங்களை பகிர்வதிலேயே குறியாக இருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் ஆச்சரியக்குறிகளையும் கேள்விக் குறிகளையும், சந்தோசரேகைகளையும், துக்கக்கோடுகளையும் முகத்தில் காட்டிய வண்ணமிருப்பது? மனம் சோர்வடையத்தொடங்கியது. இருந்தும் கடமையைச் செய்தவண்ணம் இருந்தேன். வெளியில் நோயாளியொருவர் வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார், “எவ்வளவு சொன்னாலும் அந்தப்பெடி தலையாட்டித் தலையாட்டி கேட்குதப்பா” குரலைக்கொண்டே அந்த நபரை அடையாளம் காண முடடியும்.


அன்பே சிவம்…

 

  இருண்ட வானம் சிறிது வெளுக்கத்தொடங்கியிருந்தது. என்ன சனியன் பிடிச்ச மழை விடுறமாதிரிதெரியல என்று சினந்தபடி எழுந்தார் சைவப்பழமும் சிவதொண்டனுமாகிய சிவநேசன். சிவநேசனின் கோட்பாடு இது சிவபூமி. இங்கு வேறு மதங்கள் இருக்கக்கூடாது என்பதாகும். வேறு மதம் என்ன? சிவனின் பிள்ளைகளைத் தவிர அதுதானுங்கோ உவையள் பிள்ளையார், முருகன் அவையைத்தவிர வேற ஒருத்தரையும் கும்பிடக்கூடாது. அவரின் தாரக மந்திரம் “அன்பே சிவம் அதுவே சத்தியம்”. இது அவரின் வாயில் மட்டும்தான். காலைக்கடன்களை முடித்துச் சிவனை இறுகப்பற்றியபின், வந்து


மலரின் இலக்கியம்!

 

  மலர் தான் இப்படியான தர்மசங்கடமான வாழ்வுக்குள் தள்ளப்படுவேன் என்பதை தன்பாடசாலை வாழ்நாள்களில் அறிந்திருக்கவில்லை. என்று ஏ.எல் சோதனை மறுமொழி வந்ததோ அன்றே அவளின் பட்டாம்பூச்சி சிறகுகளை இழந்து தனிமரமானாள். பாடசாலையில் அவள் ஒரு அழகிய தேவதை. விளையாட்டென்ன? கலைநிகழ்வுகள் என்ன? எல்லாவற்றிலும் அவள்தான் முதல். இதனால் பல பதக்கங்களைப் பெற்றவளாக இருந்தாள்.அவளைச்சுற்றி ஒரு வட்டம் எப்போதும் இருக்கும். இந்தவட்டத்தில் அவள் தனித்து தெரிவாள் அவளின் உயரம் காரணமாகவும். மலர் கதை, கவிதை எழுதுவதில் இலக்கியங்களை விமர்சிப்பதில்