கதையாசிரியர் தொகுப்பு: மாத்தளை சோமு

2 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்லாந்துக் காதல்

 

 மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். ‘பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், ‘பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும்


ஒற்றைத் தோடு!

 

 கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்யனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்யனின் மடியில் தவமணி உட்கார்ந்திருந்தாள். அவளின் பார்வை அந்த இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அவள் வயதொத்த பிள்ளைகள் மீது கிடந்தது. சத்யன் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு இவர்களோடுதான் தவமணி இருக்கப் போகிறாள் என நினைத்தான். ஆனால் அந்த நினைவை அவன் நெஞ்சுக்குள் ஒலித்த ஒரு குரல் கலைத்தது… “பிள்ளய கவனமா பாருங்கோ… அது எனக்கு போதும்…’ அது சாகுந்தறுவாயில் பூரணி சொன்ன வார்த்தைகள்.