Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: மயிலம் இளமுருகு

8 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்

 

  குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக் காட்டியது. ஒவ்வொரு உயிர்களும் புதிய நாளுக்கான உத்வேகத்துடன் செல்ல ஆயத்தமாகின்றன. ஊரிலிருந்து சற்று தள்ளி ஒரு அரசுமேல்நிலைப்பள்ளி. ஒற்றைப்பெடல் போட்டுக்கொண்டு ஒரு மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு வந்தான். நேரம் ஆக ஆக மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். பள்ளி அன்றைய நாளை குதூகலமாக்க நினைத்துக் கொண்டிருந்தது. சிறுவயது குழந்தைகள் அந்தப் பள்ளியைக் கடந்து தன்


அன்புவின் வாசிப்பு

 

  சீக்கிரம் கிளம்புப்பா , சீக்கிரம் என்னப்பா எங்க போறம் கிளம்புன்னு சொல்றீங்க, மறந்துட்டியா இன்னிக்கு உங்க அக்கா வீட்டுக்கு போகலாமின்னு நேத்தே சொன்னல்ல ஞாபகமில்ல,,கிளம்பு என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய இடுப்பில் உள்ள வேட்டியை இழுத்து கட்டினார் தமிழ்ப்பிரியன். அப்பா நான் வரலப்பா ,இன்னாடா சொல்ற ,அக்காவ பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு நீதான சொன்ன ,இப்ப நீயே வரலன்னு சொன்னா என்னா அர்த்தம், அதெல்லாம் முடியாது போய்தான் ஆவனும் ரெடியாகு போ என்று கண்டிச்சு சொல்ல அதற்கு


தேவதை

 

  ஏங்க ரொம்ப வலிக்குது முடியல சீக்கிரம் இங்க வாங்க. ஏம்மா என்னாச்சு சொல்லு தமிழ் வலிக்குதா? உண்மையாவா? சொல்லு. அட ஆமாங்க வலிக்குது. எங்க அப்பா அம்மாவிற்கு போன் போட்டு வரச்சொல்லுங்க. சரியாத்தான் சொல்றீயா? ஏங்க நான் ஏன்? இதிலப்போய் பொய் சொல்லப்போறேன். நான் இவ்வளவு தூரம் சொல்றேன். நீங்க இன்னும் புரிஞ்சிக்க மாட்றீங்க. சரிமா நான் ஏன் கேக்குறேன்னா நாம பாக்குற ஹாஸ்பிடல் 100 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. அவ்வளவு தூரம் போயிட்டு சாதாரண